வங்கி கணக்கை மூட போறீங்களா? இந்த விசயத்தை கவனத்தில் கொள்ளவும்!

சேமிப்பு கணக்கிலுள்ள தொகையானது நெகட்டிவாக இருந்தால் கணக்கை மூட குறிப்பிட்ட வங்கி அனுமதிக்காது, நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால் கிரெடிட் ஸ்கோரும் மோசமாக இருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2022, 10:03 AM IST
  • பல சேமிப்பு கணக்கு வைத்திருப்பதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.
  • சேமிப்பு கணக்குகளை சரியாக பராமரிக்காத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.
  • இதனால் நெகட்டிவ் பேலன்ஸ் பிரச்சனை ஏற்படுகிறது.
வங்கி கணக்கை மூட போறீங்களா? இந்த விசயத்தை கவனத்தில் கொள்ளவும்!  title=

பொதுவாக சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக செலவு செய்துவிடாமல் அதில் ஒரு பகுதியை எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைக்கிறோம், பெரும்பாலும் பணத்தை சேமிக்க வங்கிகளை நாடுகிறோம்.  சிலர் ஒரு சேமிப்பு கணக்கு மட்டும் வைத்திருப்பார்கள், சிலர் பல்வேறு வங்கிகளின் சலுகைகளை பெரும் நோக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வங்கி கணக்குகளை வைத்திருப்பார்கள்.  இதுபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பது நல்ல விஷயமாக கருதப்படுகிறது, ஏனெனில் இப்போது ஒரு வங்கி செயல்படாமல் போகும் பட்சத்தில் மற்ற வங்கிகளின் பலனை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.  ஒரு விஷயத்தில் நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டது என்று ஒன்று இருக்கும், அதேபோல தான் பல சேமிப்பு கணக்கு வைத்திருப்பதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.  

அதாவது நீங்கள் தொடங்கியிருக்கும் அனைத்து சேமிப்பு கணக்குகளையும் சரியாக பராமரிக்க இயலாத பட்சத்தில் குறிப்பிட்ட வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும்.  அப்படி வங்கிகள் அபராதம் விதிப்பதால் சில மக்கள் அந்த சேமிப்பு கணக்குகளை உடனடியாக மூடி விடுகின்றனர், ஆனால் சேமிப்பு கணக்கை மூடுவதற்கு முன் எந்தெந்த விஷயங்களை எல்லாம் கவனிக்க என்பது பலருக்கும் தெரிவதில்லை.  முதலில் எந்த வங்கியிலுள்ள கணக்கை மூட விரும்புகிறீர்களோ அந்த கணக்கிலுள்ள இருப்பை சரிபார்த்து, கிட்டத்தட்ட 2-3 வருடங்களுக்கான ஸ்டேட்மெண்டை டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும். 
இது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் உதவிகரமாக இருக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் இந்த ஸ்டேட்மென்ட் பயனுள்ளதாக இருக்கும்.  

மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமல் ஆதார் கார்டை எப்படி டவுன்லோட் செய்வது

உங்களது சேமிப்பு கணக்கில் முறையாக பணத்தை பராமரிக்காததால் நெகட்டிவ் பேலன்ஸ் பிரச்சனை ஏற்படுகிறது, அப்படி உங்கள் சேமிப்பு கணக்கிலுள்ள தொகையானது நெகட்டிவாக இருந்தால் கணக்கை மூட குறிப்பிட்ட வங்கி அனுமதிக்காது. நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால் கிரெடிட் ஸ்கோரும் மோசமாக இருக்கும், அதனால் சர்வீஸ் சார்ஜ் போன்றவற்றை செலுத்தி அதன் பின்னர் கணக்கை மூட வேண்டும். நீங்கள் மூட விரும்பும் சேமிப்புக் கணக்கின் மூலம் ஏதேனும் பில்கள் மற்றும் மாதாந்திர சந்தா போன்ற இஎம்ஐ-கள் எதுவும் இருந்தால், அதனை ரத்துசெய்ய வேண்டும்.  

இதனை ரத்து செய்யாமல் சேமிப்புக் கணக்கை மூடுவதால் உங்களுக்கு வங்கிகளிலிருந்து கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.  சேமிப்பு கணக்கை மூடுவதற்கு பல வங்கிகளும் கணக்குதாரர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வசூலிக்கிறது, இந்த தொகையாரிடம் வசூலிக்கப்படும் என்றால் சேமிப்பு கணக்கை தொடங்கி 1 வருடத்திற்குள்ளேயே கணக்கு மூடுபவர்களிடம் இருந்து மட்டும் தான் வசூலிக்கப்படுகிறது.  அதனால் சேமிப்பு கணக்கை தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளேயே அந்த கணக்கை மூடுவதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு இருக்கா? தீபாவளிக்கு இந்த பொருட்களை பெறுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News