மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி: தமிழ்நாட்டில் மின் இணைப்பு உள்ள அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்தது முதல் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் இதை செய்து முடிக்க ஏதுவாக, அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இயங்கும் என தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும் ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டியது அவசியமாகும். இதுவரை தங்கள் டிஎன்இபி கணக்கை ஆதாருடன் இணைக்காத அனைவரும், மின்வாரிய கட்டணத்தை ஒழுங்காக செலுத்த, உடனடியாக இதை செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் பணியை ஆன்லைனிலும் எளிதாக செய்து முடிக்கலாம். அதற்கான முழு செயல்முறையை இங்கே காணலாம்.
ஸ்டெப் 1: நுகர்வோர் TNEB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு அதாவது nsc.tnebltd.gov.in/adharupload-க்கு முதலில் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: இங்கே, உங்கள் சேவை இணைப்பு எண்ணின் விவரங்களை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 3: அடுத்த கட்டத்தில், உங்கள் மொபைல் எண்ணைச் வெரிஃபை செய்ய வேண்டும். அதை செய்ய, முதலில் OTP ஐ உருவாக்க வேண்டும். OTP ஐ உள்ளிட்டு உங்கள் கணக்கை வெரிஃபை செய்யவும்.
ஸ்டெப் 4: குடியிருப்பாளரின் விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 5: இதைத் தொடர்ந்து TANGEDCO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய ஆதார் அட்டை எண்ணை வழங்கவும்.
ஸ்டெப் 6: ஆதார் எண் மற்றும் ஆதாரில் உள்ளபடி உங்கள் பெயரை உள்ளிடவும்.
ஸ்டெப் 7: உங்கள் ஆதார் ஐடியை பதிவேற்றவும்
ஸ்டெப் 7: படிவத்தை சமர்ப்பிக்கவும். ஒப்புகை ரசீதையும் (acknowledgment receipt) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க | மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது மிக சுலபம்: முழு செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ