Best Places To Celebrate Christmas 2024 In Chennai : இந்த ஆண்டு, மிக விரைவில் முடிவடைய இருக்கிறது. பொங்கலுடன் தொடங்கிய இந்த 2024ஆம் ஆண்டு, இப்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுடன் கொண்டாட்டங்களுடன் முடிவடைய இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே, சென்னையில்தான் அதிக மக்கள் வாழ்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். இங்கு சென்னையை பூர்விகமாக கொண்டவர்களின் அளவிற்கு, வேலைக்காக வந்தவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. இவர்களின் பலர் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு செல்வர் ஒரு சிலருக்கு இங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களும், எங்கெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாம் என ஐடியா இல்லாமல் இருப்பவர்களும் கண்டிப்பாக ‘இந்த’ இடங்களுக்கு செல்லாம்.
பீனிக்ஸ் வணிக வளாகம்:
சென்னையில் இருக்கும் மிக பிரபலமான வணிக வளாகங்களுள் ஒன்று, ஃபீனிக்ஸ் மால். இந்த இடத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பலவித அலங்காரங்களை செய்து வைத்திருப்பர். வண்ணமயமாக ஜொலிக்கும் இந்த இடத்தில் பலர் குடும்பம் குடும்பமாக வந்து தங்களின் அன்புக்குரியவர்களுடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவர். இங்கு தியேட்டர், கேம் சென்டர் என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. எனவே கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கு செல்லலாம்.
செயிண்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம்:
கிறிஸ்துமஸ் அன்று தேவாலயத்திற்கு செல்லவில்லை என்றால் எப்படி? சென்னையை சுற்றி பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கின்றன. அதில் பிரபலமான ஒன்று செயிண்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம். மதச்சார்பற்று, வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கூட இங்கு செல்வதுண்டு. இங்கு சென்றால் மன அமைதி கிடைப்பதாக கூட சிலர் நினைக்கின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த தேவாலயமே வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அது மட்டுமன்றி இந்த தேவாலயம் பழமை வாய்ந்ததும் கூட. எனவே இங்கு சென்று அந்த பழமையையும் ரசிக்கலாம்.
மேலும் படிக்க | கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேரள பம்பர் லாட்டரி டிக்கெட் இன்னும் விற்பனைக்கு வராதது ஏன்?
பெசண்ட் நகர் கடற்கரை:
எந்த பண்டிகை வந்தாலும், பெரிதாக செலவில்லாமல் சென்று வரும் ஒரே இடமாக இருக்கிறது கடற்கரை. சென்னையில் பெசண்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை ஆகியவை இருக்கின்றன. உங்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ்ஸை கொண்டாட நினைத்தால் கண்டிப்பாக இங்கு செல்லலாம்.
தக்ஷின் சித்ரா:
ECR-ல் இருக்கும் பழம்பெரும் அருங்காட்சியகம், தக்ஷின் சித்ரா. தென்னிந்தியாவின் கலாச்சாரத்தை பரைசாற்றும் இடமாக இருக்கும் இது, பல்வேறு வடிவிலான வீடுகள், ஆடைகள் என அனைத்தையும் பறைசாற்றும் வகையில் இருக்கிறது. இங்கு என்ன பண்டிகை என்றாலும் அதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும் சில கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறலாம்.
சாகச பூங்காக்கள்:
சென்னை மற்றும் அதனை சுற்றி குயின்ஸ் லேண்ட், விஜிபி என சில சாகச பூங்காக்கள் உள்ளன. இங்கு சென்று, உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். அதே போல இந்த பூங்காக்களில் குழந்தைகளுக்கென ஒரு கட்டணமும், பெரியவர்களுக்கு ஒரு கட்டணமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கம்மி பட்ஜெட்டில் மனநிறைவான 7 கிறிஸ்துமஸ் பரிசுகள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ