புதுடெல்லி: 6 லட்சம் பேரின் ஆதார் அட்டைகளை UIDAI ரத்து செய்துள்ளது. ஆதார் சரிபார்ப்புக்காக முகத்தை அடையாளம் காணும் புதிய கருவியை அறிமுகப்படுத்த அரசு தயாராகி வருவதாக ஆதார் அட்டை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை MeitY தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஆதார் அட்டை தொடர்பான கேள்விக்கு பதிலளித்தபோது, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். வங்கியில் இருந்து அனைத்து அரசாங்க திட்டங்கள், மொபைல் / தொலைபேசி இணைப்புகள் என பலவித சேவைகளுக்கு ஆதாரமான அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | ஆதார் தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது என்பதை தொடகத்திலிருந்தே பல தரப்பினர் எதிர்த்து வந்தனர், இது மக்களின் தனியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் என்ற கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் மத்திய அரசு ஆதார் அட்டையை அனைவரும் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால், போலி ஆதார் கார்டுகள் மற்றும் ஆதார் கார்டுகளை காட்டி மோசடி தொடர்பான செய்திகள் தற்போது அதிகமாக அம்பலமாகும் நிலையில், பல்வேறு தரப்பினரும் ஆதார் அட்டை தொடர்பான பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, ஆதார் அட்டை தயாரிக்கும் அமைப்பான UIDAI சுமார் 6 லட்சம் போலி ஆதார் அட்டைகளை ரத்து செய்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்படி, இதுவரை 5,89,999 போலி ஆதார் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1200 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்பு
புதிய சரிபார்ப்பு அம்சம் விரைவில் சேர்க்கப்படும்
ஆதார் அட்டை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்தார். போலி ஆதார் அட்டை தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க, UIDAI பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்காக, ஆதார் அட்டையில் கூடுதல் சரிபார்ப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் முகம் அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பு அடங்கும். தற்போது, பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்க கைரேகை மற்றும் கருவிழி சரிபார்க்கப்படுகிறது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
11 இணையதளங்கள் மீது நடவடிக்கை
ஆதார் சேவை தொடர்பான 11 போலி இணையதளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனவரி 2022 முதல் இதுபோன்ற 11 இணையதளங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | மருத்துவராக பணியாற்றிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்
ஆதார் அட்டையைப் பயன்படுத்துபவரை பரிந்துரைக்கவும், பயோமெட்ரிக் விவரங்களைத் திருத்தவும் அல்லது மொபைல் எண்ணைச் சேர்க்கவும் இந்த இணையதளங்களுக்கு அதிகாரம் இல்லை, அவை முறைகேடாக செயல்பட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவா கேந்திரா மூலமாகவோ மட்டுமே பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய முடியும்.
கண்டறியப்பட்ட அனைத்து இணையதளங்களுக்கும் UIDAI நோட்டீஸ் அனுப்பி, ஆதார் சேவை தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆதார் அட்டையின் முகத்தை அடையாளம் காணும் அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்படு. இது அறிமுகப்படுத்தப்பட்டதும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் அடையாளத்திற்காக கைரேகை மற்றும் கருவிழியைத் தவிர முகத்தைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முடியும்.
மேலும் படிக்க | பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ