வைகை, பல்லவன் உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றம்!

வைகை, பல்லவன், இண்டர்சிட்டி உட்பட ஒரு சில விரைவு ரயில்களின் கால அட்டவணையில் நேரம் மாற்றி அமைத்துள்ளது தெற்கு ரயில்வே.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2022, 04:42 PM IST
  • தெற்கு ரயில்வேயில் சில ரயில்களின் நேரம் மாற்று அமைப்பு.
  • 10 முதல் 20 நிமிடங்கள் முன்னதாகவே வர உள்ளது.
  • வரும் ஏப்ரல் 1 முதல் புதிய நேரம் கடைபிடிக்கப்படும்.
வைகை, பல்லவன் உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றம்! title=

வரும் 01.04.2022 முதல் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, காரைக்குடி மற்றும் சென்னைக்கு இடையே செல்லும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் காலை 5.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு 12.15க்கு சென்னைக்கு வந்தடையும்.  இனி இடையில் உள்ள புதுக்கோட்டை, அரியலூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் முன்னதாகவே வரும்.  சென்னையில் தொடங்கி காரைக்குடி வரும் நேரத்தில் மாற்றம் இல்லை, இருப்பினும் திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் 10 நிமிடங்கள் முன்னதாக வர உள்ளது.

train

மேலும் படிக்க | பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இந்தியன் ரயில்வே: கட்டண சலுகை பற்றிய பெரிய அப்டேட்

அதேபோல், சென்னை மற்றும் மதுரைக்கு இடையே செல்லும் வைகை எக்ஸ்பிரஸ்,  ஒவ்வொரு நிறுத்தத்திலும் 3 முதல் 5 நிமிடங்கள் முன்னதாகவே வர உள்ளது.  கடலூர் முதல் சென்னை வரை செல்லும் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதியும் 2 மணிக்கு புறப்பட்டு கடலூரில் மாலை 5.37க்கு சென்றடையும்.  விழுப்புரம் தொடங்கி மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் மதுரையில் காலை 04.05க்கு புறப்பட்டு விழுப்புரத்தில் காலை 11.15க்கு சென்றையும்.  இடையில் உள்ள, அனைத்து நிறுத்தங்களிலும் 3 முதல் 5 நிமிடங்கள் முன்னதாக வர உள்ளது.

திருச்சி - திருவனந்தபுரம் செல்லும் இன்டெர்சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் திருச்சியில் காலை 7.20க்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே வர உள்ளது.  அதே போல், திருச்சிராப்பள்ளி முதல் காரைக்கால் செல்லும் விரைவு ரயில், திருச்சியில் 06.40க்கு புறப்பட்டு காரைக்காலில் 10.45க்கு சென்றடையும்.  இடையில் நிற்கும் ஓவ்வோரு நிறுத்தங்களிலும் 10 நிமிடங்கள் முன்னதாகவே வர உள்ளது.

மேலும் படிக்க | ரயில் வண்டிகளில் தீப்பிடிப்பதை நம்மால் தடுக்க முடியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News