வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்பாத நபர்கள் இருக்கிறார்களா என்ன. வெற்றியைப் பெறவே கடுமையாக உழைக்கிறார்கள். தொழில் ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், ஒரு வெற்றிகரமான நபராக இருக்க, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதே நேரத்தில், உழைப்பிற்கான பலன்களை பெற வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் உங்களுக்கு பெரிதும் உதவும். வாஸ்து சாஸ்திரப்படி, நீங்கள் சில விஷயங்களை கடைபிடித்தால், நீங்கள் வெற்றி பெறுவது எளிது.
வாஸ்து சாஸ்திரத்தில்,வீட்டில், அலுவகத்தில் கம்யூட்டரை வைக்க வேண்டிய சரியான திசை பற்றி கூறப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் கம்யூட்டரை சரியான திசையில் வைத்திருந்தால், உங்களை வெற்றியை யாரும் தடுக்க முடியாது. எனவே கீழ் கண்டவற்றை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.
1. தொழில் ரீதியாக வாழ்க்கையில் வெற்றியைப் பெற, வடக்கு திசையில் கம்யூட்டரை வைப்பது மிகவும் நன்மை பயக்கும். இந்த திசையில் அமர்ந்து வேலை பார்ப்பது, ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாகவே, பிற விஷயங்களிலோ குழப்பத்தில் வாழ்பவர்களுக்கு அல்லது அவர்களின் தொழில் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாதவர்களுக்கு குழப்பம் நீங்கவும், தெளிவான முடிவு எடுக்கவும் உதவும்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தைகள் அறிவு கூர்மையுடன் இருக்க சில எளிய வாஸ்து குறிப்புகள்!
2. படிக்கும் குழந்தைகள், வீட்டில் பயன்படுத்தும் கம்ப்யூட்டரை, தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில் கணினிகள் இருந்தால், படிப்பதில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் கவனம் சிதறாமல் படிப்பார்கள்.
3. கணினியை, கலை, இசை அல்லது அது தொடர்பான விஷயங்களுக்கு வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் போது, கிழக்கு, வடகிழக்கு திசை மிகவும் நல்லது. இங்கு வைக்கப்பட்டுள்ள கணினி, நடனம் அல்லது பாடுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு அல்லது அதில் தொழில் ரீதியாக வெற்றி பெற விரும்புவோருக்கு மிகவும் நன்மை பயக்கும்.
4. ஆன்மீகம் அல்லது தொடர்புடைய துறையில் செய்பவர்கள், கணிணியை, தெற்கு திசையில் வைத்தால் மிகவும் நல்லது. இந்த திசை நிம்மதியையும், ஆக்கபூர்வமான சிந்தனையையும் தருகிறது, இது அனைவருக்கும் அவசியம்.
மேலும் படிக்க | Kitchen Vastu: சப்பாத்தி செய்ய கூட சாஸ்திரம் இருக்கா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR