இந்துமத திருமணங்களில் பொதுவாக ஆண்களுக்கு வயது அதிகமாகவும், பெண்களுக்கு வயது குறைவாகவும் இருக்கும். ஒரே வயதில் திருமணம் செய்து கொள்பவர்களைக் கூட அரிதாக மட்டுமே பார்க்க முடியும். அப்படி இருக்கையில் வயது அதிகமாக இருக்கும் பெண்களை, ஆண்கள் மணந்து கொள்வது என்பது அத்திபூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும். இது குறித்த சந்தேகங்கள் இளைஞர்கள், வயது வந்த பெண்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருக்கிறது.
மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆரம்பம் ஆனது பொற்காலம்
இது குறித்து ஜாதக ரீதியில் பார்க்கும்போது, வயதுக்கும் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில கிரக அமைப்புகளின் அடிப்படையில் இப்படியான சம்பவங்கள் ஏற்படும். ஜாதகத்தில் ஏழாம் வீடு திருமண பந்தத்தைத் தரக்கூடிய மனைவியை பற்றி குறிக்கக்கூடியது. ஜாதகத்தில் 7ம் வீட்டில் சனி பகவானும், 8ல் ராகு போன்ற அமைப்பு அல்லது 7ல் சனி, ராகு என இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமண தாமதம் அல்லது ஆண்களை விட அதிகமான வயது இருக்கும் பெண்ணுடன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 7ல் சனி இருந்தால் இதுபோன்ற விஷயம் நடக்கும்.
மற்றபடி, ஆண்களை விட வயது அதிகமான பெண்களை மணந்து கொள்வது என்பது தவறொன்றுமில்லை. ஒன்று இரண்டு வயதுகள் குறைவாக இருந்தால் நல்லது என மணமகன் பெற்றோர் எதிர்பார்ப்பதும், மணமகன் வயது அதிகமாக இருக்க வேண்டும் என மணமகள் பெற்றோர் நினைப்பதும் பொதுவாக இருக்கக்கூடிய மனநிலை. காலங்காலமாக இருக்கும் இந்த பாரம்பரிய விஷயத்தை அப்படியே கடைபிடிக்கின்றனர். காதல் திருமணங்கள் மட்டும் விதிவிலக்கு.
மேலும் படிக்க | ஆகஸ்ட் 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்: மகிழ்ச்சி பொங்கும் செல்வம் பெருகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ