ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள செயலி வாட்ஸ்அப் தான், வாட்ஸ் அப் பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு இந்த செயலியின் பயன்பாடு அதிகரித்துவிட்டது, குறிப்பாக இந்தியா மற்றும் பிற ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இந்த செயலி பாதுகாப்பானதாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது. அடிக்கடி வாட்ஸ் அப் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பலவித புது புது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. மென்பொருள் கோளாறு காரணமாக சில சாதனங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருவதால் சில பழைய சாதனங்களிலிருந்து எங்கள் சேவையை நிறுத்துகிறோம் என வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது
வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் இயங்குகிறது, அதுமட்டுமன்றி KaiOS என்கிற தளமும் வாட்ஸ் அப் செயலியை ஆதரிக்கிறது. ஆப்பிள் ஐபோன்கள் வாட்ஸ் அப் பயன்பாட்டை பெறும், அதேசமயம் ஐஓஎஸ் 11 மற்றும் அதன் சப்சீக்வெண்ட் அப்டேட்களும் வாட்ஸ் அப் செயலியை ஆதரிக்காது. பழைய ஐபோன்கள் பயன்படுத்துபவர்களின் சாதனத்தில் வாட்ஸ் அப் பயன்பாட்டை தொடர்ந்து இயக்கமுடியாது. 2012ல் ஆப்பிள் ஐபோன் 5 தொடங்கப்பட்டது, இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பழமையானது, இதற்கு ஒரே வழி வாடிக்கையாளர்கள் அவர்களது பழைய சாதனத்தை புதிய ஆப்பிள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் சாதனத்திற்கு மாற்றுவது தான். உங்கள் சாதனத்தின் வாட்ஸ் அப் இயங்குமானால் உங்கள் சாதனத்தை அப்க்ரேட் செய்யும்படி வாட்ஸ் அப் உங்களுக்கு நினைவுபடுத்தும்.
உங்கள் சாதனம் வாட்ஸ் அப்பை ஆதரிக்கும் என்பதை சரிபார்க்க, 'செட்டிங்ஸ்' என்பதற்குச் சென்று, ஜெனரல் என்பதைத் தட்டவும், பின்னர் சாஃப்ட்வெர் அப்டேட்டை தேர்ந்தெடுக்கவும், இதனை செய்யும்பொழுது உங்கள் சாதனம் இணையவசதியுடன் இருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு சாதனத்தை பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச் மற்றும் அதற்குப் பிந்தைய வெர்ஷன்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது.
மேலும் படிக்க | SBI FD Rate Hike: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பம்பர் பரிசு அளித்த SBI
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ