Kisan Credit Card News Tamil | மத்திய பட்ஜெட் 2025ல் விவசாய துறைக்கு முன்னுரிமை கொடுத்து பல முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். குறிப்பாக விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் கிசான் கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்தியுள்ளார். தற்போது வரை 3 லட்சம் ரூபாயாக இருந்த கிசான் கிரெடிட் கார்டு வரம்பு இப்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் வட்டி மானியமும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன?
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் கிசான் கிரெடிட் கார்டு. விவசாயிகளின் நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இது. KCC திட்டம், விவசாயிகளுக்கான கடன் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாய தேவைகளுக்கு வெறும் 4 சதவீதம் அடிப்படையில் மலிவு வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன. கிசான் கிரெடிட் கார்டு பெற விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். அதேபோல் 5 ஆண்டுகள் மட்டுமே கிசான் கிரெடிட் கார்டு செல்லுபடியாகும். அதன்பிறகு புது கார்டு வாங்க வேண்டும்.
கிசான் கிரெடிட் கார்டு யாரெல்லாம் பெறலாம்?
கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் அதாவது நில உரிமையாளர், குத்தகைதாரராக இருக்க வேண்டும். விவசாய நிலம் இல்லை என்றாலும் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்பவர்களும் இந்த கார்டு பெறலாம். இதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. இதுதவிர கால்நடை வளர்ப்பு, பயிர் உற்பத்தி, மீன் வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களும் கிசான் கிரெடிட் கார்டு பெறலாம். முன்னதாக, ரூ.1.60 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு உத்தரவாதம் தேவைப்பட்டது. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவாதமில்லாத கடன் வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தியது. அதாவது ரூ.2 லட்சம் வரையிலான கடன்களை இப்போது எந்த பிணையும் இல்லாமல் பெறலாம்.
கிசான் கிரெடிட் கார்டு எண்ணிக்கை
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் 1.24 லட்சம் கிசான் கடன் அட்டைகளும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் 44.40 லட்சம் கடன் அட்டைகளும் வைத்திருக்கின்றனர். விவசாயிகள் கடன் வாங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, மத்திய அரசு கிசான் கடன் போர்ட்டலை (KRP) அறிமுகப்படுத்தியது. சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் கடன்களாக இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தனியார் நிதி நிறுவனம் மற்றும் வட்டிக்காரர்களிடம் விவசாயிகள் பணம் வாங்குவது வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2025: கல்வித்துறையில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய சிறப்பம்சங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ