காதல் முறிவு என்பது சந்தேகமே இன்ரி, மிகவும் கடினமான அனுபவம்தான். ஆரம்பத்தில் மிகவும் அழகான தருணங்களையும் நமக்கு தன்னம்பிக்கையையும் கொடுக்கும் காதல், அது முடிவு பெறும் போது தாங்க முடியாத வலியை கொடுத்து விட்டு சென்று விடும். இந்த காதல் முறிவை தாங்குவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களா பெண்களா என்பதையும், காதல் முறிவை இருவருக்கும் இருக்கும் வித்தியாசங்களையும் இங்கே பார்ப்போம்.
1.வலியை அதிகம் உணருபவர்..
பெண்கள், அறிந்தோ அறியாமலோ தங்களது காதலருடன் உணர்வுகளால் மிகவும் நெருக்கமாகியிருப்பர். காதல் முறிவு ஏற்பட்டவுடன், மன வலி என்பது இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். உணர்வு ரீதியாக ஒருவர் மீது மிகவும் சார்ந்திருக்கும் பெண்களுக்கு, அவர் இல்லை என்றவுடன் அதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இருக்காது. அதனால் அந்த வலியில் இருந்து கொஞம் கொஞ்சமாக அவர்கள் மீண்டு வந்து விடுவர். ஆண்களில் பலர், தங்களுக்கு உணர்வுகள் என்ற ஒன்று இல்லாததை போல காட்டிக்கொள்வர். அதிலும் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டுவதற்கு பதில் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அந்த வலியுடன் வாழ பழகிவிடுவர். இதனால், காதல் முறிவு ஏற்பட்டவுடன் இவர்களுக்கு அந்த புரிதல் எளிதில் வராது. சில நாட்கள் கழித்துதான் அது நிதர்சனம் என்பதையே அவர்கள் புரிந்து கொள்வர். இதனால் பிரேக்-அப்பிற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர இவர்களுக்கு பெண்களை விட அதிக கால தாமதமாகும். லேட்டாக வலியை உணர்ந்தாலும் மிகவும் அதிகமாக உணருவர்.
மேலும் படிக்க | பிரேக்-அப் ஆகிவிட்டதா? உடைந்த உங்கள் இதயத்தை மீண்டும் ஒட்ட வைப்பது எப்படி?
2.மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்கள்..
இந்த விஷயத்தில், ஆண்/பெண் என இருவருமே அதிக மன அழுத்தத்தைதான் உணருவர். ஆனால், அதை எதிர்கொள்ளும் விதத்தில் இருவரும் வேறுபடுவர். பல பெண்கள், அழுகை வந்தால் அழுவதற்கோ மனம் விட்டு பேசுவதற்கோ தயங்குவ்தில்லை. காதல் முறிவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு அதை எப்படி எதிர்கொள்வது என பெரும்பாலான பெண்கள் முயற்சி செய்வர். பல ஆண்களின் நிலை வேறு. இவர்கள், மன அழுத்தத்தை எதிர்கொள்வதை விட்டுவிட்டு, அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என யோசிப்பர். ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதை விட அதை தவிர்ப்பதற்கு பல வழிகளை இவர்கள் கண்டுபிடிப்பர். இதனால், மன அழுத்தத்திலிருந்து வெளிவர இவர்களுக்கு சில நாட்கள் எடுக்குமாம்.
3. தன்னம்பிக்கையை இழப்பவர்கள்..
காதல் முறிவிற்கு பிறகு, இரு பாலினருமே தங்கள் மீது வைத்திருந்த தன்னம்பிக்கையிலிருந்து கொஞ்சம் தளர்ந்துதான் போவார்கள். அதுவும், தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருப்போர் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். காதலிக்கும் போது தங்களை மிகவும் அழகாக உணர்ந்தவர்கள், அதன் பிறகு அந்த உணர்வே இல்லாமல் போய்விடுவர். இதிலிருந்து மீண்டு வர இருவருக்கும் அதிக நாட்கள் எடுக்கும். ஆனாலும் பெண்களை விட நிறைய ஆண்கள் இதில் கொஞ்சம் தாமதமாக செயல் படுவர். இதனால்தான் இவர்கள் காதல் முறிவிற்கு பிறகும் காதலியை தொடர்பு கொள்ள முயற்சிப்பர்.
4. கோபம் கொள்பவர்..
காதல் முறிவிற்கு பிறகு, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆண்கள் அதிகமாக கோபப்படுவர். ஆனால், தங்களின் துக்கத்தையும், வலியையும் குழப்பத்தையும் மறைப்பதற்காக கோபம் என்ற போர்வைக்குள் இவர்கள் ஒளிந்து கொள்வதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிறைய பெண்கள் காதல் முறிவு தங்களால்தான் ஏற்பட்டது என நினைத்துக்கொண்டு நெடு நாட்களாக அந்த வலியுடனேயே இருப்பர். அவர்களுக்கு உண்மை புரிந்தவுடன்தான் கோபம் என்ற ஒன்றே வரும். ஆனால், அந்த கோபத்தை நல்ல வழியில் செலுத்து வாழ்க்கையில் முன்னேற முயற்சிப்பர்.
ஆண்கள்-பெண்கள் இருவருமே காதல் முறிவினால் பாதிக்கப்படுவர். ஆனால், அவர்கள் அந்த வலியை எதிர்கொள்ளும் விதத்தில் இருந்து வேறுபடுவதால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆண்கள்தான் நீண்ட காலம் வலியை உணருவது போல தோன்றும். இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை ஆராய்ச்சியின் அடிப்படையிலும் பிற தரவுகளை வைத்து சரிபார்த்த பின்னரும் எழுதப்பட்டது. நிதர்சனத்தில், நீங்கள் இருந்த காதல் உறவை பொருத்து உங்கள் காதல் முறிவின் வலி வேறுபடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ