புதுடெல்லி: உங்களுக்கு பரிசு வெல்ல பிடிக்குமா? யாருக்குத்தான் பிடிக்காது? லட்சக்கணக்கில் பரிசு வெல்ல ஒரு அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. நீங்கள் 40 லட்சம் ரூபாயை வெல்ல விரும்பினால், இந்திய ரிசர்வ் வங்கி உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இன்னும் பாதுகாப்பானதாக்க, RBI முதன்முறையாக Global Hackathon-ஐ (1st Global Hackathon) நடத்துகிறது. இந்த குளோபல் ஹேக்கத்தானில் பங்கு கொண்டு 40 லட்சம் ரூபாய் வெல்லலாம்.
ரிசர்வ் வங்கி கூறியது என்ன?
ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, 'HARBINGER 2021' என்று பெயரிடப்பட்ட இந்த ஹேக்கத்தானின் பதிவு நவம்பர் 15 முதல் தொடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செவ்வாயன்று தனது முதல் உலகளாவிய ஹேக்கத்தானான 'HARBINGER 2021-Innovation for Transformation' என்ற கருப்பொருளில் 'Smarter Digital Payments' பற்றி அறிவித்தது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு
இந்த ஹேக்கத்தானைப் பற்றி அறிவித்த ரிசர்வ் வங்கி, இந்த ஹேக்கத்தானின் கருப்பொருள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேலும் விறுவிறுப்பாகவும் திறமையாகவும் செய்வது என்று கூறியுள்ளது. இதன் மூலம் இதில் அதிக மேம்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிசை வெல்ல என்ன செய்ய வேண்டும்?
இந்தப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொழில்துறை நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறவும், அவர்களின் புதுமையான தீர்வுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழு இருக்கும்.
ALSO READ:RBI முக்கிய செய்தி: பழைய ரூபாய் நோட்டு, நாணய விற்பனை பற்றிய எச்சரிக்கை!!
ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும்
ஹார்பிங்கர் 2021 இன் ஒரு பகுதியாகும் பங்கேற்பாளர்கள் தொழில் வல்லுநர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறவும், அவர்களின் புதுமையான தீர்வுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்க்ப்படும் என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு நடுவர் குழு ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும். முதலிடம் பெறுபவருக்கு ரூ.40 லட்சமும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.20 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
வெற்றியாளர்கள் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
- பண பரிவர்த்தனைகளை டிஜிட்டல் (Digital Trasfer) முறையில் மாற்றுவதற்கான புதிய மற்றும் எளிதான வழிகளைக் கண்டறிய வேண்டும்.
- தொடர்பில்லா சில்லறை கொடுப்பனவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
- டிஜிட்டல் கொடுப்பனவுகளில் அங்கீகார பொறிமுறையின் கூடுதல் வழிகளைக் கண்டறிய வேண்டும்.
- டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகளைக் கண்டறிய சமூக ஊடக பகுப்பாய்வு கண்காணிப்பு கருவியை உருவாக்க வேண்டும்.
பணத்திற்கான தேவையில் பதிவு செய்யப்பட்ட அதிகரிப்பு
கோவிட்-19 (COVID-19) தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகம் முழுவதும் பணத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உள்ளிட்ட பல்வேறு முறைகள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) UPI அமைப்பு, நாட்டில் பணம் செலுத்தும் முக்கிய முறையாக வேகமாக வளர்ந்து வருகிறது. UPI 2016 இல் தொடங்கப்பட்டது, இதன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றன.
ALSO READ:Paytm Payments வங்கிக்கு RBI 1 கோடி ரூபாய் அபராதம் விதித்தது ஏன்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR