புத்திசாலி ராசிகள்! வெற்றிக் கொடி நாட்டும் 'இந்த’ ராசிக்காரரா நீங்கள்?

இந்த 4 ராசிக்காரர்களின் புத்திசாலித்தனத்தின் முன் அனைவரும் தலைவணங்குகிறார்கள்! உங்கள் ராசியும் இதில் ஒன்றா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2022, 07:07 AM IST
  • கூர்மையான புத்தி உடைய ராசிக்காரர்கள்
  • மனம் வேகமகா செயல்படும் ராசி
  • தடைக்கல்லும் இவருக்கு வெற்றிப் படிக்கட்டே!
புத்திசாலி ராசிகள்!  வெற்றிக் கொடி நாட்டும் 'இந்த’ ராசிக்காரரா நீங்கள்? title=

புதுடெல்லி: ஜோதிடத்தில், ராசியின் தன்மையை வைத்து,அவர்களின் இயல்பான குணாதிசயங்களை சொல்வார்கள். சில ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். 

இவர்கள் மிகவும் கூர்மையான புத்தி உடையவர்கள், பொதுவாக அனைவரும் இவர்களின் அறிவுக்கு தலைவணங்குவார்கள். இந்த நபர்களின் மனம் மிக வேகமாக இயங்குகிறது.

ஒவ்வொரு பிரச்சனையையும் உடனடியாக தீர்க்கும் இந்த ராசிக்காரர்களுக்கு, துரித முடிவினால் வாழ்வில் அதிரடி முன்னேற்றம் ஏற்படுகிறது. தொழிலில் இருந்தாலும் சரி, உத்தியோகத்தில் இருந்தாலும் சரி, இவர்கள் வெற்றிக் கொடி நாட்டுவார்கள். இவர்களின் மூளை மிக வேகமாக இயங்கும்.

ALSO READ | சனியின் ராசியில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை! 3 ராசிக்காரர்களுக்கு யோகம்!

சிம்மம் (Leo) - சிம்ம ராசிக்காரர்களின் மனம் மிக வேகமாக நகரும். இதனால், ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுகிறார்கள்.

அதே நேரத்தில், ரிஸ்க் எடுக்கும் சிம்ம ராசிக்காரர்கலின் துணிச்சல் அவர்களுக்கு யானை பலம் கொடுக்கிறது. இந்த ராசிக்காரவர்கள் எல்லாவற்றிலும் திறமையானவர்கள்.

தடைக்கல்லை, வெற்றி படிக்கட்டாக மாற்றும் திறன் படைத்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்.

ALSO READ | சனி பகவானின் ராசியில் 5 கிரகங்கள்: யாருக்கு ஆபத்து? யாருக்கு ஆதாயம்?
 
விருச்சிகம் (Scorpio)- விருச்சிக ராசிக்காரர்களும் மிகவும் புத்திசாலிகள். ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படி எதிர்கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியும்.

விருச்சிக ராசிக்காரர்கள் பலதரப்பட்டவர்கள். கடினமான பிரச்சனைகளை கூட தீர்க்கும் திறன் அவர்களை பணியிடத்தில் மிகவும் பிரபலமாக்குகிறது.
 
கும்பம் (Aquarius)- கும்ப ராசிக்காரர்கள் கூர்மையான மனதுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் வயது, வேலை செய்யும் இடம் அல்லது கடினமான சூழ்நிலைகள் என எதுவுமே அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. 

தங்களுடைய ஆழ்ந்த அறிவாலும், கூர்மையான மனதாலும், ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்கிறார்கள். கடின உழைப்பாளியாக விளங்கும் கும்ப ராசிக்காரகளின் வெற்றியின் தாரக மந்திரம் கடும் உழைப்பு மட்டுமே...  

தனுசு (Sagittarius)- தனுசு ராசிக்காரர்களும் மிகவும் புத்திசாலிகள், எனவே அவர்கள் வாழ்க்கையில் எந்த சிரமங்களையும் சமாளிப்பார்கள். தஙக்ளது திறமைகளை வெளிப்படுத்துவதில் நம்பிக்கை சற்று குறைவாக இருப்பதால், பல நேரங்களில் தனுசு ராசிக்காரர்களின் திறமை அனைவருக்கும் தெரிவதில்லை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளந. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

Also READ | முக்கிரக சேர்க்கையால் பலனடையும் 3 ராசிகள்! நீங்கள் எந்த ராசிக்காரர்? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News