'அங்காடித் தெரு' மகேஷ் நடிக்கும் படத்தில் 5 கதாநாயகிகள்!

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் தற்போது 'ஏவாள்' என்னும் ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 04:28 PM IST

Trending Photos

'அங்காடித் தெரு' மகேஷ் நடிக்கும் படத்தில் 5 கதாநாயகிகள்! title=

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் தற்போது 'ஏவாள்' என்னும் ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார்.  இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில், சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம். 

mahesh

இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர்.  இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார்.  இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 

mahesh

நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கி இருப்பவர் ஜித்தேஷ் கருணாகரன் .  இப்படத்தின் கதை, தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ  கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது. அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன். இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன. இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் 'ஏவாள்'. 

mahesh

படத்தின் திகில் காட்சிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளன என்று படக்குழு தெரிவித்துள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி,  பாலக்காடு, குட்டிக்காணு, பீர்மேடு ஆகிய இடங்களில் நடைபெற்றது.  இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ஏவாள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை பொங்கல் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

ALSO READ | சூர்யாவுக்காக சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் எப்படி உள்ளது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News