நடிகர் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப்-2 திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தமது அடுத்த படத்துக்கான பணிகளில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது.
கேஜிஎஃப் படங்கள் அடைந்த பிரமாண்ட வெற்றி மற்றும் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிவரும் சலார் ஆகிய படங்களின் தாக்கம் காரணமாக இப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான Hombale Films மீது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் அடுத்த படத்தை படத்தை இயக்கப் போவது யார் எனும் கேள்வியும் இருந்துவந்தது.
இந்நிலையில் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரான சுதா கொங்கரா இதை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி ஓடிடியில் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று நல்ல கவனத்தைப் பெற்றது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ ஒருவரின் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாவது அதுவே முதன்முறை எனும் சிறப்பையும் அப்படம் பெற்றது.
To a new beginning with a riveting story @Sudha_Kongara, based on true events.@VKiragandur @hombalefilms @HombaleGroup pic.twitter.com/mFwiGOEZ0K
— Hombale Films (@hombalefilms) April 21, 2022
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ படத்தோட ஒரிஜினல் க்ளைமாக்ஸ் இதுதானாம்!
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கவுள்ள புதிய படமானது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரமாண்டமாக உருவாகவுள்ளதாம். இயக்குநர் யார் என அறிவிக்கப்பட்டபோதும் இதில் நடிக்கவுள்ள கதாநாயகன் யார் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படத்திலும் நடிகர் சூர்யாவே நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பான் - இந்தியா மோகம் அதிகரித்துள்ளதால் இந்தப்படமும் பான் - இந்தியா ரிலீஸாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சூரரைப்போற்று படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ்குமாரே இதற்கும் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Hombale Films நிறுவனத் தயாரிப்பில் உருவான கேஜிஎஃப் படங்களில் நடிகர் யஷ் ஏற்று நடித்திருந்த ‘ராக்கி பாய்’ கதாபாத்திரம் இந்திய அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில் அந்நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திலும் சூர்யாவுக்கு இதுபோல இந்திய அளவில் பெயர் கிடைக்குமா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!