அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடித்திருக்கும் டோபரா திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய டாப்ஸி, படத்தை பார்க்காமல் புறகணிக்குமாறு அழைப்பு விடுத்தவர்களை சரமாரியாக விளாசியுள்ளார். ஒரு படத்தை பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது ரசிகர்களுடைய விருப்பம். ஆனால், அதைவிடுத்து புறக்கணிக்குமாறு அடிக்கடி சமூக ஊடகங்களில் அழைப்பு விடுப்பது என்பது என்னைப் பொறுத்த வரை மிகப்பெரிய காமெடி எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, " டோபரா படம் 2018 ஆம் ஆண்டு தொடங்கியிருந்தாலும், கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது வெளியாகியிருக்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் என நம்புகிறேன். சமூக ஊடகங்களில் படத்தை பார்க்காமல் அழைப்பு விடுப்பது என்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. அடிக்கடி இதுபோன்ற விடுக்கப்படும் அழைப்பை யாரும் மதிக்கமாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை இது காமெடியைத் தவிர வேறுஎதுவும் இல்லை. ரசிகர்கள் விரும்பினால் படம் பார்ப்பார்கள், இல்லையென்றால் பார்க்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இது நம்ம த்ரிஷா குட்டியா? வைரலாகும் புகைப்படம்
இயக்குநர் அனுராக் காஷ்யப் பேசும்போது, " பார்வையாளர்களுக்குப் பிடித்தால் படம் பார்க்கச் செல்வார்கள். பிடிக்கவில்லையென்றால் பார்க்க மாட்டார்கள். ஆனால் புறக்கணிப்பு அழைப்பு விடுப்பது என்பது பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது போன்றது. டோபரா படம் ஸ்பெயின் படத்தின் தழுவல் என கூறப்படுவதில் உண்மையில்லை. அதன் சாயலிலோ அல்லது ஈர்க்கப்பட்டோ டோபரா எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க எங்களின் எண்ண ஓட்டத்தில் உருவாக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
பாலிவுட் பட உலகில் அடிக்கடி படங்களை பார்க்க வேண்டாம் என அழைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அமீர்கானின் ’லால் சிங் சத்தா’ படம், அக்ஷய்குமாரின் ‘ரக்ஷபந்தன்’ ஆகிய படங்களை ரசிகர்கள் பார்க்க வேண்டாம் என பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதேபோல், டாப்ஸி நடித்திருக்கும் ‘டோபரா’ படத்திற்கும் பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், இப்படியான விமர்சனங்களுக்கு வெளிப்படையாக பதிலடி கொடுத்திருக்கிறார் டாப்ஸி.
மேலும் படிக்க | தமன்னாவின் புதிய அவதாரம்! வியந்து பார்க்கும் மற்ற நடிகைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ