மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடத்து பிரபலமான நடிகை, அர்த்தனா பினு. இவரது தந்தை விஜயகுமாரும் மலையாளத்தில் பெரிய நடிகராக இருப்பவர். இவர், தன்னையும் தனது அம்மாவையும் வீடு புகுந்து மிரட்டியதாக அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அர்த்தனா பினு:
மலையாளத்தில் பிரபல நடிகையாக விளங்குபவர், அர்த்தனா பினு. கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் பிறந்த இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடத்துள்ளார். குறிப்பாக, நடிகர் கார்த்தியுடன் இணைந்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்திருந்தார். 2018ஆம் ஆண்டு வெளியான ‘செம்ம’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து நடித்தார். சமுத்திரகனியுடன் தொண்டன் படத்திலும் சூரியுடன் வெண்ணிலா கபடிக்குழு 2 படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மம்மூட்டியின் படத்தில் நடித்துள்ளார். வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான முகமாக வலம் வரும் நடிகை இவர். பெற்றோரின் விவாகரத்து:
அர்த்தனாவின் தந்தை விஜயகுமார் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக விளங்குபவர். விஜயகுமாரிடமிருந்து நடிகையின் தாயார் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டார். அதிலிருந்து, நடிகை அர்த்தனா தனது அம்மா மற்றும் தங்கையுடன் கொச்சியில் உள்ள தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வருகிரார்.
கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமார்..!
நடிகர் விஜயகுமார், அர்த்தனாவும் அவரது தாயாரும் தங்கியிருக்கும் வீட்டிற்கு அடிக்கடி வந்து கொலை மிரட்டல் விடுப்பதாக அர்த்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஒரு வீடியோவை அர்த்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் விஜயகுமார், குடையுடன் சுவர் மீது ஏறி குதிப்பதும் ஜன்னல் வழியாக இவர்களை பார்த்து கோபமாக கத்துவது போன்ற போட்டோவும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவுடன் சேர்த்து தனது தந்தை தொடர்ந்து செய்து வரும் செயல்கள் குறித்து நடிகை அர்த்தனா விவரித்துள்ளார்.
அர்த்தனாவின் பதிவு..
தனது தந்தை விஜயகுமார், பல ஆண்டுகளாக தனது குடும்பத்தை தொல்லை செய்து வருவதாகவும் இவர் மீது பலமுறை போலீஸில் புகார் கொடுத்ததாகவும் அர்த்தனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பல வருடங்களாக இவரது மிரட்டல்கள் தொடருவதாகவும் 10 வருடங்களுக்க்கு முன்னரே இவர் வீட்டிற்கு அருகில் வர கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அர்த்தனா தனது பதிவில் விவரித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் கதவு பூட்டியிருந்ததால் விஜயகுமார் ஜன்னல் வழியாக தங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னை அவர் கூறும் படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் எனக்கூறி மிரட்டியதாகவும் நடிகை தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என நடிகை தனது பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
ஷூட்டிங்கிற்கு வந்து தொல்லை..
நடிகை அர்த்தனா ஒரு மலையாள படத்தில் நடித்து வந்துள்ளார். அவர் படப்பிடிப்பில் இருந்த போது, அங்கு வந்த விஜயகுமார் தகாத வார்த்தைகளால் பேசி அர்த்தனாவிடமும் படக்குழுவினரிடமும் சண்டை போட்டுள்ளார். எப்போது தான் ஒரு படத்தில் நடிக்க சென்றாலும் அதை தடுப்பதற்காக தன் மீது விஜயகுமார் வழக்கு தொடுப்பதாக நடிகை தனது பதிவில் தெரிவித்துள்ளார். நடிகையின் தாயார், தனது நகைகள் மற்றும் பணத்தை விஜயகுமாரிடமிருந்து மீட்பதற்காக அவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளதையும் நடிகை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி..
சினிமாவில் ஒரு கலைஞராகவும் பிறரை மகிழ்விப்பவராகவும் பார்க்கப்படும் நடிகர் விஜயகுமார், நிஜத்தில் இப்படிப்பட்டவராக இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது சினிமா வாழக்கையின் ஆரம்பத்தில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அர்த்தனா, தற்போது அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணமா என ரசிகர்கள் இவரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க | ஜவான் டூ ஜெயிலர்-பெரிய ஹீரோக்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றவுள்ள படங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ