உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 (Bigboss5) நிகழ்ச்சி 68 நாட்களை எட்டியுள்ளது. ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ராஜூ, தாமரை, அக்ஷரா, வருண், சிபி, பாவனி, நிரூப், சஞ்சீவ், அமீர் மற்றும் அபிநய் உள்ளிட்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸின் பிரதான டேக் ’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது தான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக இந்தவாரம் டபுள் எமிலினேஷன் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read | கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்
இந்த தகவல் வெளியானவுடன், யார் வெளியேற்றப்படுவார்கள்? என்பது டிவிட்டர் உள்ளிட்ட ஷோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பிக்பாஸ் பைனலிஸ்ட் என்றெல்லாம் இதுவரை சொல்லிக் கொண்டிருந்தவர்களின் பெயர்கள், இந்தவார எலிமினேஷனில் அடிபடுகிறது. காரணம், இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற அரசியல் கட்சி டாஸ்க்கில் அவர்களது ஈடுபாடு பெரிய அளவில் இல்லை. மேலும், சில வாக்குவாதங்களில் இதுநாள் வரை கட்டிக்காத்து வந்த பெயர்களை டோட்டல் டேமேஜ் செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக, ராஜூ பிரியங்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அபிநய் மற்றும் பாவனி குறித்து பேசியது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
சிபியும், பாவனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பலருக்கும் பிடிக்கவில்லை. ஸ்டிராங் போட்டியாளர் என கருதப்பட்ட நிரூப், 2 வாரங்களாக ஆள் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். அபிநய் வழக்கம்போல் சைலண்ட் மோடிலேயே இருக்கிறார். இந்த விஷயங்களையெல்லாம் மொத்தமாக கூட்டி கழித்து பார்க்கும்போது, இந்த வார வெளியேற்றப் பட்டியலில் இவர்களில் யாரேனும் ஒருவர் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். ஆனால், அதேநேரத்தில் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என கமல் அடிக்கடி கூறுவதால், இதில் சில டிவிஸ்டுகளும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Also Read | கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்க மாட்டோம்: தமிழக சுகாதாரத் துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR