காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த மனுவை நாளை விசாரணை செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதை தொடர்ந்து, விவசாய அமைப்புகள், பொது மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் இன்று கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள இந்த போராட்டம் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. போராட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவகுமார், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Chennai: Tamil actors Vijay, M. Nassar and Vishal take part in protest over #Cauvery issue. pic.twitter.com/OhZgirdvMf
— ANI (@ANI) April 8, 2018
முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெறும் போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கலந்து கொள்வார்கள் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்திருந்தார்.