நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள பேய்-த்ரில்லர் திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ். இந்த படத்தில் சுரபி, ரெடின் கிங்க்ஸ்லீ, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரேவற்பினை பெற்று திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
டிடி ரிட்டர்ன்ஸ்:
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில், சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார். இவர்கள் மட்டுமன்றி இதற்கு முன்னர் சந்தானத்துடன் பேய் படங்களில் இணைந்து நடித்த மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படம்தான் சந்தானம் நடித்த நாயகனாக நடித்த முதல் பேய் படம். பேய்-நகைச்சுவை கான்செப்ட் வர்க் அவுட் ஆக, அவர் தொடர்ந்து தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து மூன்றாம் பாகமாக வெளியாகியுள்ள படம்தான் டிடி ரிட்டன்ர்ஸ்.
கதை-விமர்சனம்:
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களா. அங்கு இருக்கும் ஒரு பேய், அதனிடம் விளையாடி தோற்றால் மரணம். இந்த கான்செப்டை வைத்து உருவாகியிருக்கிறது டிடி ரிட்டர்ன்ஸ். இந்த பேயிடம் மாட்டிக்கொள்ளும் தன் நண்பர்களை காப்பாற்றும் ஹீரோவாக வருகிறார் சந்தானம். பார்த்து பழகி புளித்த பேய் படங்களுக்கு மத்தியில் புத்துணர்ச்சி தரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது டிடி ரிட்டன்ஸ். இது வரை ஹீரோவாக நடிப்பதற்காக ரசிகர்களிடம் நெகடிவ் விமரசங்களை வாங்கிய சந்தானம் இந்த படத்திற்காக ரசிகர்களின் க்ரீன் சிக்னலை பெற்றுள்ளார்.
மொத்த வசூல்-பட்ஜெட்:
டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானம் நான்கடவுள் ராஜேந்திரனை தவிர பெரிய நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை. துணை நடிகர்கள் யாவரும் சந்தானத்துடன் அடிக்கடி படங்களில் தோன்றுபவர்ளாகத்தான் இருக்கிறார்கள். இப்படம் மொத்தமாகவே 12 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான முதல்நாளே இப்படம் 2.5 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படம் மூன்றாம் நாளாக திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் கலெக்ஷன் உலகளவில் 5.6 கோடியை தாண்டியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.
தோனி படத்தை தோற்கடித்து..
பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். முதல் படமாக, ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள ‘லெட்ஸ் கெட் மேரீட்’ திரைப்படத்தை அவர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பல கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த இப்படம் முதல் நாளிலேயே வசூலிலும் விமர்சனத்திலும் சறுக்கியது. இதையடுத்து, மக்கள் அனைவரும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். சிலர் இப்படத்தை, “தோனியின் படத்தை தோற்கடித்த படம்..” என்று குறிப்பிடுகின்றனர். டிடி ரிட்டர்ன்ஸ் படம் 5 கோடியை வசூல் செய்திருக்கும் இந்த நேரத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் 1கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காமெடி நடிகர் டூ நகைச்சுவை ஹீரோ-சந்தானம்:
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் சந்தானம். தமிழின் முன்னணி நடிகர்களின் படங்ளில் நாயகனுக்கு நண்பனாகவும் சகோதரனாகவும் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன்’ என்று கூறிவிட்டு பல படங்கிளில் ஹீரோவாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் காமெடி நாயகனாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஆனாலும் ரசிகர்களுக்கு இவரை நகைச்சுவை கதாப்பாத்திரமாக பார்க்கவே பிடித்திருந்தது. ஹீரோவாக நடித்துக்க கொண்டே இடை இடையில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்கலாமே என ரசிகர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்களையே ‘இனி நீங்கள் ஹீரோவாகவே நடிக்கலாம்..’ என சொல்ல வைத்திருக்கிறது டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம்.
மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கி இளம் நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ