தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ராம். இவர் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் ரசிகர்களிடமும், சினிமா ஆர்வலர்களிடமும் வரவேற்பைப் பெற்றவை.
இவர் கடைசியாக பேரன்பு படத்தை இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பேரன்பு படத்துக்கு அடுத்ததாக நிவின் பாலியை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கினார் ராம்.
அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனித்துள்ளார்.
மேலும் படிக்க | பீஸ்ட் கொண்டாட்டம், மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கிய விஜய் ரசிகர்கள்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தனுஷ்கோடியில் தொடங்கி கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.
சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் தத்ரூபமாக மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென ஒருநாள் விசிட் அடித்த இயக்குநர் மிஷ்கின் இந்த செட்டை பார்த்து வெகுவாக பாராட்டினார்.
மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் உருவ கேலி: நியாயமா நெல்சன்?
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. நிவின்பாலியுடன் ராம் முதல்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR