சிவகார்த்திகேயன் மேல் தவறு இருக்கிறதா? நடிகை கூறிய பளீச் பதில்

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காத சிலரின் தூண்டுதலின் பேரில் தான் இமான் இப்படி சொன்னார் என்று நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 30, 2023, 03:38 PM IST
  • டி.இமான்-சிவகார்த்திகேயன் சர்ச்சை விவகாரம்.
  • இமானை தூண்டிவிட்டு இது போன்ற செயலை செய்துள்ளார்.
  • நடிகர் சிவகார்த்திகேயன் மேல் தவறு இருக்கிறதா?
சிவகார்த்திகேயன் மேல் தவறு இருக்கிறதா? நடிகை கூறிய பளீச் பதில் title=

சிவகார்த்திகேயன்-டி.இமான் சர்ச்சை: நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காத சிலரின் தூண்டுதலின் பேரில் தான் இமான் இப்படி சொன்னார் என்று நடிகை அனுபரமி தெரிவித்துள்ளார்.

டி.இமான்-சிவகார்த்திகேயன் விவகாரம்:
தமிழ் திரையுலகில், பல படங்களில் ஒன்றாக வேலைப்பார்த்த கலைஞர்களாகவும் நண்பர்களாகவும் இருந்தவர்கள், டி.இமான் (D Imman) மற்றும் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட சிவகார்த்திகேயனின் படங்களுக்கு டி.இமான் இசையமைத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் சமீப காலமாக எந்த படங்களிலும் இணைந்து பணிபுரிவதில்லை. இதற்கான காரணம் குறித்த இமானிடமே ஒரு நேர்காணலில் கேட்க்கப்பட்டது. 

சர்ச்சை குறித்து பேசிய இமானின் முன்னாள் மனைவி..
இதயனிடையே சிவகார்த்திகேயனின் இந்த விவகாரம் பெரிதாக எழுந்த போது, டி.இமானின் முன்னாள் மனைவி ஒரு ஊடக சேனலுக்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டி கொடுத்தார். அதில் சிவகார்த்திகேயன் தனக்கும் இமானிற்கும் சமாதானம் பேச முயற்சி செய்ததாகவும் அவர் ஒரு ஜெண்டில் மேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | பாயாசத்தில் பாய்சன்.. மாரியின் கர்ப்பத்திற்கு ஆபத்தா? - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தனக்கு சிவகார்த்திகேயன் பெரிய துரோகத்தை செய்து விட்டதாகவும், அது என்ன என்பதை வெளியில் கூற முடியாது என்றும் இமான் ஒரு நேர்காணலில் குறிபிட்டார். இந்த நேர்காணல் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர் இதற்கான காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்தனர். 

இமானின் விவாகரத்திற்கு சிவாதான் காரணமா? 
இமானும் சிவகார்த்திகேயனும் நண்பர்களாக இருந்த போது, இருவரும் குடும்பத்தினருடன் அடிக்கடி சந்தித்துக்கொள்வர். இந்த நிலையில்தான், இமானிற்கு 2021 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. இவருக்கு இந்த திருமணம் மூலம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதையடுத்து, இமான் கடந்த 2022 ஆம் ஆண்டு அமீலியா என்பவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இமானின் நேர்காணலை பார்த்த ரசிகர்கள், சிவகார்த்திகேயன்தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என்ற முடிவிற்கே வந்து விட்டனர். இது குறித்து சிவகார்த்திகேயன் எந்த பொதுவெளியிலும் இதுவரை பேசவில்லை. அதுமட்டுமின்றி நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

நடிகை அனுபரமி அதிர்ச்சி பேட்டி:
இந்த விஷயம் குறித்து நடிகை அனுபரமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து கருத்து தெரிவித்தனர். அதில், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகி விடும் என்று நினைக்கும் இமான், விவாகரத்து செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டபின் இப்போது இதுகுறித்து பேச என்ன அவசியம் உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மேல் தவறு இருக்கிறதா? இல்லையா என்று எதுவுமே தெரியாமல் ஒரு தரப்பினர் அவர் மீது வன்மத்தை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தொகுப்பாளராக இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். 

வளர்ந்து வரும் ஒரு நடிகர் மீது இப்படி ஒரு அசிங்கத்தை சுமத்துவதற்கான நோக்கம் என்னவாக இருக்கும். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காத சிலர் இமானை தூண்டிவிட்டு இது போன்ற செயலை செய்துள்ளார். இமானுக்கு தனது குழந்தை மீது இருக்கும் பாசத்தால் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை வெளியில் சொல்லவில்லை என்று சொன்னார். அப்போ, சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா... அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும். யாராக இருந்தாலும் தயவு செய்து அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள் என்று நடிகை அனுபரமி யூடியூப் சேனல்ன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஆம்... லியோ படத்தின் ஃப்ளாஷ்பேக் பொய் தான் - உண்மையை சொன்ன லோகேஷ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News