அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 11:29 AM IST
அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!  title=

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். மேலும் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரஜினிகாந்தின் (Rajinikanth) அண்ணாத்தே (Annaatthe) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றனர்.  ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டு மீண்டும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி படப்பிடிப்பு நிறைவடைந்தது.

 

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது வரை இப்படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை. ரஜினி ரசிகர்கள் நீண்ட நாட்களாக இந்த படத்தின் அப்டேட்காக காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.  இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  மேலும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.  மேலும் அண்ணாத்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ வலிமை - அண்ணாத்த ஒரே நாளில் ரிலீஸ்? உண்மை நிலவரம் இதோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News