"அன்பறிவு" படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்: Exclusive Update!

ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2021, 03:59 PM IST
"அன்பறிவு" படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்: Exclusive Update! title=

ஆல்பம் பாடல்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஹிப்ஹாப் ஆதி "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.  அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் காஷ்மீரா பர்தேஷி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் "அன்பறிவு".  இப்படத்தில் நெப்போலியன், விதார்த், தீனா, சங்கீதா க்ரிஷ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.  சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை டிஜி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

anbarivu

இப்படம் மதுரையிலுள்ள மூன்று தலைமுறையை சேர்ந்த குடும்பத்தின் பாச பிணைப்பை பற்றி சொல்லும் வகையில் நகைச்சுவை கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக OTT தளத்தில் நவம்பர் மாதம் வெளியிட போவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.  

 

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.  இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி நேரடியாக "Disney Hotstar"-ல் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.  சமீபத்தில் வெளியான ஆதியின் சிவகுமாரின் சபதம் திரையரங்கில் வெளியாகி, தற்போது OTT யிலும் வெளியாகி உள்ளது.

ALSO READ | மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க இருக்கும் விஜயகாந்த்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News