Varisu vs Thuvinu: இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழின் முன்னணி நடிகர்களான அஜித் - விஜய் ஆகியோரின் படங்கள் திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியாகின. அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் 'துணிவு' திரைப்படமும்; விஜய், வம்சி உருவாக்கத்தில் 'வாரிசு' திரைப்படமும் ஜன. 11ஆம் தேதி ரிலீஸ் ஆகியது.
வாரிசு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கும், வாரிசு படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. துணிவு படத்தை போனி கபூர் தயாரித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் பட விநியோகத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியது. மேலும், வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்த நிலையில், படத்தின் சில பகுதிகளில் மட்டும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை விநியோகித்தது.
இதைத்தொடர்ந்து, இரு படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக இருப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது எனலாம். விடுமுறை தினங்களை மனதில் வைத்து களம்கண்ட இருப்படங்களும் வியாபார ரீதியாக தங்களது திட்டத்தின் மூலம் நல்ல அறுவடையை பெற்றது எனலாம். இருப்பினும், ஆக்சன் திரில்லரான துணிவு படத்திற்கும், குடும்ப உறவுகள் தொடர்பான வாரிசு படத்திற்கும் கடுமையான போட்டிகள் இருந்தன.
மேலும் படிக்க | ரஜினியின் கேரக்டர் சீக்ரெட்டை சொன்ன ஜெயிலர் பட நடிகர்... என்ன தெரியுமா?
அந்த வகையில், தமிழ்நாடு அளவில் வாரிசு படத்தை விட துணிவு படம் நல்ல வசூலை பெற்றதாக கூறப்பட்டது. அதே நேரம், ஒட்டுமொத்தமாக, துணிவு படத்தை வாரிசு வசூலில் வீழ்த்தியதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தங்களின் படத்தின் வெற்றியை சமூக வலைதளங்களில் அறிவித்து கொண்டாடினர். வழக்கம்போல் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை தூக்கிப்பிடித்து கொண்டாடினர்.
அந்த வகையில், வாரிசு, துணிவு ஆகிய படங்கள் வெளியாகி இன்றோடு (ஏப். 19) 100 நாள்கள் நிறைவடைகிறது. இந்நிலையில், 100 நாள்களில் இரு படங்களும் குவித்த வசூல் சாதனை குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
துணிவு வசூல் விவரம்
துணிவு படம், தமிழ்நாட்டில் ரூ. 131 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 65 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ. 4.5 கோடியும், கர்நாடகாவில் ரூ. 13.5 கோடியும், கேரளாவில் ரூ. 5 கோடியும், மற்ற மாநிங்களில் ரூ. 4 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வாரிசு வசூல் விவரம்
வாரிசு படம், தமிழ்நாட்டில் ரூ. 141 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 80 கோடியும், கர்நாடகாவில் ரூ. 15 கோடியும், கேரளாவில் ரூ. 13 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ. 25 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ. 13 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு லியோ என பெயரிடப்ப்டடுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வரும் மே 1ஆம் தேதி அவரின் பிறந்தநாள் அன்று அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காதல் சுகுமார் இயக்கத்தில் நடிக்கப்போகும் காமெடி நடிகர்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ