Jailer Collection On First Week: கடந்த ஆக. 10ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, கேரளா என தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் பல்வேறு திரையரங்குகளில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது. சுமார் 2 ஆண்டுகள் இடைவெளியில், அதாவது அண்ணாத்த திரைப்படத்தின் பின்னடைவுக்கு பின் திரைக்கு வரும் ரஜினி படம் என்பதாலும், பீஸ்ட் படத்தினால் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்த நெல்சன் இயக்கிய படம் என்பதாலும் அனைத்து தரப்பினரும் ஜெயிலர் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
அனைவரின் எதிர்பார்ப்பையும் ரஜினி - மோகன்லால் - சிவராஜ்குமார் கூட்டணி பூர்த்தி செய்து முதல் வாரத்திலேயே பெரும் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது எனலாம். படத்தில் மேற்குறிப்பிட்டவர்களை தவிர்த்து தமன்னா, விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன் என அனைத்து துணை கதாபாத்திரங்களும் கதையமைப்பில் கச்சிதமாக பொருந்தி இத்தகைய வெற்றிக்கு வழிவகுத்ததாக இணையத்தில் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
படத்தில் ரஜினியின் ஸ்கிரீன் பிரசன்ஸ், மோகன்லால் - சிவராஜ்குமாரின் நறுக் கேமியோ, சரியான இடங்களின் டார்க் காமெடி, பாடல்கள் முக்கியமாக விநாயகத்தின் வில்லத்தனம் ஆகியவை படத்தை திரையரங்கில் ரசிக்கும்படி செய்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவை அனைத்திற்கும் அடித்தளமாக அனிருத்தின் இசை அமைந்துள்ளதாகவும், அவரின் இசையே படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் பலரும் கருத்து தெகிவிக்கின்றனர். காவாலா மற்றும் Hukum பாடல் உலகளவில் பலத்த வரவேற்பை பெற்றிருப்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்.
#Jailer WW Box Office
ENTERS ₹450 cr club in just 7 days.
Independence Week WINNER among #Gadar2, #OMG2, #BholaaShankar.
||#Rajinikanth | #ShivarajKumar | #Mohanlal||
Day 1 - ₹ 95.78 cr
Day 2 - ₹ 56.24 cr
Day 3 - ₹ 68.51 cr
Day 4 - ₹ 82.36 cr… pic.twitter.com/mo3ULyUCAA— Manobala Vijayabalan (@ManobalaV) August 17, 2023
மெகா ஹிட்
அந்த வகையில், ஜெயிலர் திரைப்படம் சுதந்திர தினத்தன்று (ஆக. 15) உள்நாட்டில் ஒட்டுமொத்தமாக ரூ. 200 கோடி வசூலை தாண்டியது. மேலும் அதன் ஏழாவது நாளில் திரையரங்குகளில், படம் இந்தியா முழுவதும் ரூ 15 கோடிகளை ஈட்டியுள்ளது என்று ட்விட்டரில் கலெக்சன் டிரக்கர்ஸ் ட்வீட் செய்துள்ளனர். ஜெயிலர் நேற்று ஒரே நாளில் திரையரங்க மொத்த வசூலில் 42.43% ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜெயிலரின் பாக்ஸ் ஆபிஸ் பயணம் முதல் நாளில் 48.35 கோடி ரூபாயுடன் தொடங்கியது. அதன் இரண்டாவது நாளில், சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படம் சற்று போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் சரியான ஓப்பனிங்கை பெறவில்லை. ஜெயிலர் தென் மாநிலங்களில் பெரும் வெற்றியைப் பெற்றாலும், வட மாநிலங்களில் சன்னி தியோல் நடித்த கதர் 2 படம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இது ஏற்கனவே பதானுக்குப் பிறகு இந்த ஆண்டின் இரண்டாவது அதிக ஹிந்தி வசூல் சாதனை படைத்துள்ளது.
புதிய சாதனை
இந்நிலையில், தமிழ் சினிமாவின் வசூல் வரலாற்றில் ஜெயிலர் திரைப்படம் புது சாதனையை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் தற்போது அறிவித்துள்ளது,. அதாவது, ஜெயிலர் திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில், 375.40 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு சினிமா வரலாற்றில் வெளியாகி ஒரு வாரத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படம் ஜெயிலர் என தெரிவித்துள்ளது.
Alapparai kelappitom#JailerRecordMakingBO@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @mirnaaofficial @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8… pic.twitter.com/d0gvpwUwyy
— Sun Pictures (@sunpictures) August 17, 2023
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தெரிவித்ததுபோல, ரஜினி Record Breaker (சாதனையை முறியடிப்பவர்) அல்ல ரஜினி Record Maker (எட்ட இயலாத புதிய சாதனையை படைப்பவர்) என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அது தற்போது நிரூபணமாகியுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஜெயிலர் படம் ஓடிடியில் ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்போது வெளியாகிறது தெரியுமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ