கபாலி: முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்து

Last Updated : Jul 23, 2016, 02:36 PM IST
கபாலி: முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்து title=

‘கபாலி’ நேற்று ரிலீஸ் ஆனது. இதை ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். 

முதல் நாளில் ரஜினி படத்தை பார்க்க ‘கபாலி’ டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கானோர் அலை மோதினார்கள். ‘டிக்கெட்’ என்ன விலை என்றாலும் படம் பார்த்தே தீர்வது என்பதில் பெரும் பாலானோர் உறுதியாக இருந்தனர்.

இந்தியா மட்டுமல்ல உலகம்முழு வதும் ரஜினியின் கபாலிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 50 நாடுகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் களை கட்டியது. தமிழ்நாட்டில் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

கபாலி படம் உலகம் முழுவதும் 6 ஆயிரத்து அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. 

கபாலி உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.40 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ இந்தி படத்திற்கு முதல் நாள் வசூல் ஆன ரு.36 கோடி  சாதனை என்று கூறப்பட்டது. இந்தி படங்களுக்கு கூட இல்லாத மிகப் பெரிய வசூல் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவார காலத்தில் ‘கபாலி’ பட வசூல் ரூ.120 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. கபாலி யில் ரஜினியின் வித்தியாச மான நடிப்பு பற்றி பேசப்படுகிறது. கபாலிபடம் திரைக்கு வருவதற்கு முன்பே பலசாதனைகளைப் படைத்தது. திரையிட்ட முதல்நாளிலேயே வசூல் சாதனை செய்து இருக்கிறது. அடுத்து வரும் நாட்களிலும் சாதனைகள் தொடரும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Trending News