கார்த்திகை தீபம் அப்டேட்: ஐஸ்வர்யாவை செக்கப் அழைத்து வந்த அபிராமி.. கர்ப்பம் குறித்து உடையும் உண்மைகள்?

Karthigai Deepam Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 18, 2024, 02:58 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • விஷயத்தை சொல்லும் மைதிலி.
  • ஐஸ்வர்யாவுடன் ஹாஸ்பிடல் செல்லும் அபிராமி.
கார்த்திகை தீபம் அப்டேட்: ஐஸ்வர்யாவை செக்கப் அழைத்து வந்த அபிராமி.. கர்ப்பம் குறித்து உடையும் உண்மைகள்? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியாவின் அத்தை மாமாவாக நடிக்க சீரியல் ஆர்ட்டிஸ்ட் இருவர் வீட்டிற்கு வர இவர்கள் பேசுவதை மைதிலி ஒட்டு கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

விஷயத்தை சொல்லும் மைதிலி

அதாவது, மைதிலி இந்த விஷயத்தை மீனாட்சி மற்றும் தீபாவிடம் சொல்கிறாள். தீபா அபிராமியை பார்க்க உட்கார்ந்தவர்களுக்கு காபியில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்து இதுல பேதி மாத்திரை கலந்து இருக்கேன், மரியாதையா ஓடி போய்டுங்க. இல்லனா அவ்வளவு தான் என்று மிரட்டுகிறாள். 

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலீட் செய்த யுவன்.. விஜயின் ரசிகர்கள் தான் காரணமா?

ஐஸ்வர்யாவுடன் ஹாஸ்பிடல் செல்லும் அபிராமி

இதனை தொடர்ந்து அபிராமிக்கு ஐஸ்வர்யாவின் கர்ப்பம் குறித்து நினைவுக்கு வர அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறாள். ஐஸ்வர்யா எங்கே போறோம் என்று கேட்க நீ கர்ப்பமா இருக்கேல அதான் ஹாஸ்பிடல் போய் வழக்கமான செக்கப் செய்துட்டு வரலாம். குழந்தை ஆரோக்கியமா இருக்கானு பார்க்கலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். 

கிடைக்கும் சைடு கேப்பில் ரியாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறாள், அவளும் ஒரு ஐடியாவை சொல்ல அந்த ஐடியா பெயிலியர் ஆகிறது. இதையடுத்து அபிராமி ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர டாக்டர் அவளை செக் செய்து கர்ப்பமில்லை என்ற உண்மையை உடைக்கிறார். இதனால் ஐஸ்வர்யா பேரதிர்ச்சி அடைகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் தந்த ராகவா லாரன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News