விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்த விமல்!? அவரே சொன்ன விஷயம்..

Latest News Actor Vimal : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விமல். இவர் விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மை என்ன?   

Written by - Yuvashree | Last Updated : Jul 8, 2024, 06:33 PM IST
  • அரசியல் கட்சி தொடங்கிய விஜய்
  • விமல் இணைந்தாரா?
  • அவரே சொன்ன பதில்!
விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்த விமல்!? அவரே சொன்ன விஷயம்.. title=

Latest News Actor Vimal : முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்பு ஹீரோவாக வளர்ந்தவர் விமல். தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக இருந்தாலும், இவரது படங்கள் ஒரு சில மட்டுமே ரசிகர்களை ரீச் செய்துள்ளது. 

விஜயுடன் நடித்த விமல்:

நடிகர் விமல், தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையின் போது நடிகர் விஜயுடன் கில்லி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் விஜய்யுடன் இருக்கும் அவரது நண்பர் குழுவில் ஒருவராக வந்திருக்கும் இவர் ஒரு சில இடங்களில் மட்டுமே டயலாக் பேசி இருக்கிறார். சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கில்லி படத்தில் நடித்த விமலுக்கும் இப்போது இருக்கும் விமலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். கில்லி படம் மட்டுமன்றி, விஜய்யுடன் வில்லு படத்திலும் நடித்திருக்கிறார் நடிகர் விமல். 

அரசியல் கட்சி தொடங்கிய விஜய்:

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதை பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வரவேற்றனர். அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து சமூக நல பிரச்சனைகளிலும், பெரிதாக பேசப்படும் நாட்டு பிரச்சினைகள் குறித்தும் பேசி வருகிறார் விஜய். ஆனால், இதுவரை யாரும் நேரடியாக சென்று அவரது அரசியல் கட்சியில் சேரவில்லை. இந்த நிலையில், இவரது அரசியல் கட்சியில் நடிகர் விமல் இணைந்ததாக தகவல்கள் பரவியது.

மேலும் படிக்க | விமல் நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!

விமல் கலந்து கொண்ட நிகழ்ச்சி..

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், சில நாட்களுக்கு முன்னர் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கும் விழாவை நடத்தினர். இதில், நடிகர் விமல் கலந்து கொண்டார். இதையடுத்து, இவர் விஜய்யின் அரசியல் கட்சியில் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கு நடிகர் விமல் விளக்கம் கொடுத்திருக்கிறார். 

விமல் விளக்கம்..!

நடிகர் விமல், தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்தும், விஜய்யின் அரசியல் கட்சியில் தான் இணைந்து விட்டதாக இதனால் பரவும் தகவல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சி, தனது நெருங்கிய நண்பர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இதனால்தான் அதில் தான் நட்பு ரீதியாக கலந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.  மேலும், தனக்கு இப்பாேதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். 

நடிகர் விமலுக்கு, சமீப ஆண்டுகளாக வெளியான படங்களில் பெரும்பாலானவை சறுக்கலைத்தான் கொடுத்திருக்கின்றன. ஒரு சில படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தாலும் அவை பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இவர் நடித்திருந்த ‘விலங்கு’ வெப் தொடருக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனமும் வரவேற்பும் இருந்தது. நடிகர் விமல், தற்போது SIR என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியியிருந்தது. இந்த பாடலை சமீபத்தில் விவாகரத்து குறித்த அறிவிப்பினை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமாரும் சைந்தவியும் வெளியிட்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | Vimal: அச்சு அசல் விமல் போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! வைரலாகும் குடும்ப புகைப்படம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News