Actor Dileep Shankar Found Dead : தென்னிந்தியாவில் பிரபல சீரியல் நடிகராக விளங்கி வருபவர் திலீப் சங்கர். இவர், மலையாளத்தில் பிரபல சீரியல்களாக விளங்கும் சுந்தரி, பஞ்சக்னி உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார். இவரது மரணமும், அதை சுற்றியுள்ள மர்மமும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மரணம்:
கேரளா, எர்ணாக்குளத்தை சேர்ந்த சீரியல் நடிகர் திலீப் சங்கர், தற்போது பஞ்சக்னி என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த சீரியலின் ஷூட்டிங்கிற்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று (டிச., 29) சீரியல் ஷூட்டிங் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், வெகு நேரமாகியும் திலீப் சங்கர் படப்பிடிப்பு தளத்திற்கு வராமல் இருந்திருக்கிறார். இதையடுத்து சந்தேகமடைந்த சீரியல் குழுவினர் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
அங்கு, வெகு நேரமாக கதவை தட்டியும் திலீப் சங்கர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்த விடுதியின் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். உள்ளே சென்றவுடன் துர்நாற்றம் வீசியருக்கிறது. அப்போதுதான் திலீப் மூச்சற்ற நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்திருக்கின்றனர். இதையடுத்து போலீஸாருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
மர்மமான முறையில் மரணம்:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இறந்து கிடந்த திலீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கூடவே, தடவியல் நிபுணர்களும் அந்த ஹோட்டல் அறையை ஆராய்ந்தனர். இதுவரை விசாரித்ததில் சந்தேகத்திற்கு இடமான எந்த தடையமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திலீப், மலையாளத்தில் மிகப்பிரபலமான தொடர்களாக விளங்கும் அம்மா அரியாதே, சுந்தரி, பஞ்சக்னி உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார். நன்றாக சீரியலில் நடித்து வந்த ஒருவர், இப்படி மர்மமான முறையில் இறந்து போயிருப்பது ரசிகர்களிடையே சாேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது உடலின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்தவுடன், இது குறித்த முழு தகவல் வெளியாகும்.
இவரது இறப்பு 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. அதே போல, ஹோட்டல் அறையில் ஏசி இருந்ததால் அவரது உடல் அழுகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் திலீப்பிற்கு சில உடல்நலக்கோளாறுகள் முன்கூட்டியே இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறார். இவரது உயிரிழப்புக்கு இந்த உடல்நலக்கோளாறுகள் காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் மரணம்! இறப்பதற்கு முன்பு மகள் குறித்து போட்ட பதிவு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ