Pushpa 2 Box Office Collection Day 1 : பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம், புஷ்பா 2: தி ரூல். இந்த படம், டிசம்பர் 5ஆம் தேதியான நேற்று வெளியானது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம், பான்-இந்திய அளவில் வெளியானது.
புஷ்பா 2:
சுகுமார் இயக்கத்தில், 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா: தி ரைஸ். சந்தன மரக்கடத்தலையும், அதில் இருக்கும் தாதாக்களையும் கதைக்களமாக கொண்டிருந்த இந்த படம், அந்த ஆண்டின் பெரிய ஹிட் அடித்த படமாக மாறியது. இதற்கு காரணம், படத்தில் வித்தியாசமாக நடித்திருந்த அல்லு அர்ஜுனும், ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் வந்த ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பெரிய காரணம் என்றாலும், வேகமாக திரைக்கதையும் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
முதல் பாகத்தில், சிறிது நேரமே வந்திருந்தாலும், வில்லன் நடிகராக மிரட்டியிருந்தவர், பகத் பாசில். இவருக்கு, இரண்டாம் பாகத்தில் ஹீரோவுடன் கூடவே டிராவல் செய்யும் அளவிற்கு பெரிய வில்லன் கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான சண்டை காட்சிகள், ரசிக்க வைக்கும் காதல் காட்சிகள், வேகமாக நகரும் திரைக்கதை என படத்திற்கு பலம் அதிகமாக இருப்பதால், படம் வெற்றி பெற்றிருக்கிறது.
படத்தின் வசூல்!
புஷ்பா 2 படம், ப்ரீ-புக்கிங்கிலேயே இந்த ஆண்டில் அதிக வசூல் பெற்ற படமாக இருக்கிறது. இதில் மட்டும், இப்படம் சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்திய அளவில் இப்படம் சுமார் ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவை தாண்டி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல உலக நாடுகளில் வெளியாகி இருக்கிறது. இதனால், உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.265 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஹிட் படங்களின் சாதனைகளை முறியடித்தது!
#Pushpa2 — Day 1 estimates worldwide Rs.265 crores+ gross.
All time #1 in the history of Indian cinema. pic.twitter.com/SgpVkdkPiz
— LetsCinema (@letscinema) December 6, 2024
இந்திய படங்கள் பல, இதுவரை பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அவற்றுல் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள், ஜவான், தங்கல், RRR உள்ளிட்ட படங்களும் அடங்கும். ப்ரீ-புக்கிங்கில் இந்த படங்களின் சாதனையை புஷ்பா 2 படம் முறியடித்திருக்கிறது. இதனால், இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படம், புஷ்பா 2 படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | புஷ்பா 2: ராஷ்மிகாவுக்கு பதில் நடிக்க இருந்த 37 வயது நடிகை! யார் தெரியுமா?
அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு!
புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ, ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்தது. இங்கு படம் பார்க்க வந்தவர்களின் கூட்டம், கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து, இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இவரது இரு மகன்களும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நடிகர் அல்லு அர்ஜுன் இந்த தியேட்டருக்கு வந்ததால், கூட்டம் கூடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் வெற்றி பெற்றாலும், அதை படக்குழுவால் கொண்டாட முடியாமல் போயிருக்கிறது.
மேலும் படிக்க | அல்லு அர்ஜூனுக்கு இன்னொரு தேசிய விருதா? புஷ்பா 2 படத்தின் விமர்சனம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ