எப்படி இருக்கிறது Marvel-ன் Morbius திரைப்படம்? - திரைவிமர்சனம்!

மோர்பியஸ் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2022, 08:27 AM IST
  • மார்வல் படங்களுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உண்டு.
  • ஸ்பைடர்மேன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
  • மோர்பியஸ் ஒரு டிசி படத்தை போல் உள்ளது.
எப்படி இருக்கிறது Marvel-ன் Morbius திரைப்படம்? - திரைவிமர்சனம்! title=

பொதுவாக மார்வல் படங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள பெரிய ரசிகர் கூட்டத்தை தாண்டி, இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழில் உள்ள சில நடிகர்களுக்கு கூட முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் வராத பட்சத்தில்,  மார்வல் படங்களின் முதல் காட்சிகளில் அவ்வளவு கூட்டத்தை காண முடியும். அந்த அளவிற்கு உலக சினிமா தமிழ் ரசிகர்களை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் தமிழகத்தில் வசூல் சாதனை படைத்தது, ஒரு ஹாலிவுட் படத்திற்கு தமிழகத்தில் டிக்கெட் கிடைக்காமல் இருந்தது. 

Morbius

மேலும் படிக்க | வயிறு வலிக்க சிரிக்க ஒரு படம்! இடியட் திரைவிமர்சனம்!

அந்த வகையில் மார்வெலின் மற்றொரு படமான மோர்பியஸ், நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மோர்பியஸ் படத்திற்கு மாட் சஜாமா மற்றும் பர்க் ஷார்ப்லெஸ் திரைக்கதை எழுத,  டேனியல் எஸ்பினோசா இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜாரெட் லெட்டோ, மாட் ஸ்மித் மற்றும் அட்ரியா அர்ஜோனா ஆகியோர் நடித்துள்ளனர்.  ஜாரெட் லெட்டோ மற்றும் மாட் ஸ்மித் ஆகியோர் ஒரு வகை ரத்த நோயினால் சிறுவயதிலிருந்தே பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தினமும் ரத்தத்தை மாற்றினால் மட்டுமே அவர்களால் உயிர்வாழ முடியும். மேலும் கைப்பிடி இல்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது.  இதற்காக செயற்கை இரத்தத்தையும் உருவாகிறார்.

Morbius

இந்த நோயில் இருந்து முழுவதுமாக குணமாக நினைக்கும் ஜாரெட் லெட்டோ யாருக்கும் தெரியாமல் வௌவால்களை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். இந்த ஆராய்ச்சிகளுக்கு மாட் ஸ்மித் பண உதவி செய்கிறார்.  ஆராய்ச்சி வெற்றி பெற, அந்த மருந்தை தனது உடலுக்குள் செலுத்தியவுடன் சில குளறுபடிகள் ஏற்பட, ஜாரெட் லெட்டோ ஒரு வேம்பையராக மாறுகிறார்.  இதனால் ஜாரெட் லெட்டோ ஏற்படும் பிரச்சனைகள், அவரது நண்பருக்கு என்ன ஆனது,  இறுதியில் பிரச்சனைகள் சரியானதா என்பது தான் மோர்பியஸ் படத்தின் கதை. 

வழக்கமான மார்வல் படங்களைவிட இப்படம் சற்று டிசி படம் போல் நகர்கிறது.  பொதுவாக மார்வல் படங்களில் திரைக்கதையிலேயே நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை நிறைய புகுத்தி இருப்பர். ஆனால் இப்படம் நேரடியாக கதைக்குள் மட்டுமே நகர்கிறது.  படம் தொடங்கியதிலிருந்தே நம்மளை அந்த உலகிற்குள் கூட்டி சென்று விடுகின்றனர். ஆக்ஷன், அட்வென்சர், ஹாரர், த்ரில்லர் என எல்லாவித ஜானர்களையும் இந்தப் படம் தொட்டுவிடுகிறது.  வேம்பையர் ஆக மாறிய உடன் ஹீரோ அதனை எப்படி எதிர்கொள்கிறான், வில்லன் அதனை எப்படி எதிர்கொள்கிறான் ஆகிய காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு  இருந்தது.  வழக்கான மார்வல் படங்களை போலவே மோர்பியஸ் படத்திலும் கிராபிக்ஸ் அட்டகாசமாக உள்ளது.  ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படம் எந்த விதத்திலும் போரடிக்காமல் செல்கிறது.  மோர்பியஸ் சில மார்வெல் ரசிகர்களுக்கு பிடித்து போனாலும்,   சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.

Morbius

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் பேசப்படாத கதை செல்ஃபி திரைவிமர்சனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News