அரசியலுக்கு முற்றுப்புள்ளி; ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு: ரஜினிகாந்த்

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் நிரந்தர முடிவு எடுத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 12, 2021, 01:16 PM IST
  • அரசியல் பிரவேசம் குறித்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை
  • ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்
  • வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் இல்லை
அரசியலுக்கு முற்றுப்புள்ளி; ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு: ரஜினிகாந்த் title=

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த் 2020 டிசம்பர் 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார். இதற்கிடையில் தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அன்று திட்டவட்டமாக அறிவித்தார். 

அந்தவகையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), ரஜினி மக்கள் மன்ற (Rajini Makkal Mandram) நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக செய்தி வெளியானது. அதன்படி, இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள தன் இல்லத்திலிருந்து அவர் நிர்வாகிகளை சந்திக்கப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசியலுக்கு வரப்போவதில்லை (Rajinikanth Political Entry), வர முடியவில்லை என சொன்ன பிறகு, மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை சந்திக்க முடியவில்லை.

ALSO READ | Viral Video: ரஜினிகாந்தைப் போல சூப்பர் ஸ்டண்ட் செய்ய முயன்று அடிபட்ட டூப்ளிகெட் ரஜினி

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு, இப்போது வந்திருக்கிறேன். மக்கள் மன்றத்தின் பணி என்ன என்பது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்ற கேள்விகள் உள்ளன. நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுத்துவிட்டு அது குறித்து தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அரசியல் பிரவேசம் குறித்து நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுத்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

 

 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் , என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன ?என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது .அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.

காலச் சூழலால் நாம் எண்ணம் சாத்தியப்படவில்லை . வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார் பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள். இணை. துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் .மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | Rajinikanth: 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி ரிலீஸ்; படக்குழு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News