ஹீரோவுக்கு 100 கோடி-வில்லனுக்கு எத்தனை கோடி தெரியுமா..? ‘சலார்’ படக்குழுவின் சம்பள விவரம்..!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதை தொடர்ந்து, அப்படத்தில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jul 6, 2023, 01:28 PM IST
  • கே.ஜி.எஃப் இயக்குநர் இயக்கியுள்ள படம் சலார்.
  • பிரபாஸ் ஹீரோவாகவும் பிரித்விராஜ் வில்லனகாவும் நடிக்கின்றனர்.
  • படக்குழுவின் சம்பள விவரம்.
ஹீரோவுக்கு 100 கோடி-வில்லனுக்கு எத்தனை கோடி தெரியுமா..? ‘சலார்’ படக்குழுவின் சம்பள விவரம்..! title=

சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தில் இராமனாக நடித்திருந்தவர் பிரபாஸ். இவர், ஹீரோவாக நடித்து வெளியாகவுள்ள அடுத்த படம், சலார். இந்த படத்தை ‘கே.ஜி.எஃப்’ பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதன் டீசர் இன்று வெளியாகி 8 மில்லியன் வியூஸ்களை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. இதில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரம் வெளியாகி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. 

படத்தின் பட்ஜெட்-பிரபாஸின் சம்பளம்:

தெலுங்கு ஹீரோ பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் மட்டும்தான் நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த அதிபுருஷ் கூட 700 கோடி செலவில் உருவக்கப்படது. இதையடுத்து இவர் நடிக்கும் அடுத்த பெரிய பட்ஜெட் படம், சலார். இந்த படத்தின் பட்ஜெட்டில் 10 சதவிகிதம் பிரபாஸின் சம்பளம் என கூறப்படுகிறது. இன்னொருபக்கம்  இவர் 100 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இவரது பெயர், சலார். 

மேலும் படிக்க | கசிந்த KH 233 கதை: இப்படித்தான் இருக்க போகுதாம் கமல் எச்.வினோத் படம்

ஸ்ருதி ஹாசன்: 

சலார் படத்தில் நாயகியாக நடித்து வருபவர், ஸ்ருதி ஹாசன். தொடர்ச்சியாக தமிழில் நடித்து வந்த இவர், சமீப காலமாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் இவர் ஆத்யா எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால், டீசரில் இவரை காணவில்லை. இவருக்கு இந்த படத்தில் சம்பளமாக் 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பிரித்விராஜ்:

படத்தில் ஹீரோவுக்கு அடுத்த முக்கிய கதாப்பாத்திரமே வில்லன்தான். சலார் படத்தின் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் நடிகிறார். இதில் இவரது பெயர் ஜகபதி பாபு. அரசர் வம்சாவழியை சேர்ந்த கதாப்பாத்திரமாக இவரது கேரக்டர் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவருக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியிருக்கிறார்களாம். ஹீரோ 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்க, வில்லன் இவ்வளவு குறைவாக சம்பளம் வாங்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கே.ஜி.எஃப் யூனிவர்ஸ்? 

தமிழில் லோகேஷ் கனகராஜ் ‘எல்.சி.யூ’ என்ற பெயரில் படங்களை வைத்து ஒரு யூனிவர்ஸை உருவாக்கியிருப்பது போல கன்னட இயக்கநர் பிரசாந்த் நீலும் ஒரு பட உலகத்தை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கும் சலார் படத்திற்கும் பல தொடர்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் கணித்துள்ளனர். அதற்கு பல காரணங்களையும் சாட்சிகளாக வைத்துள்ளனர். 

அதிகாலையில் வெளியான டீசர்..

சலார் படத்தின் டீசர் அதிகாலை சரியாக 5.12 மணியளவில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் க்ளைமேக்ஸில் ராக்கி பாய் கடலில் குதித்த நேரமும் 5.12தான் எனக்கூறப்படுகிறது. இதனால், ராக்கி பாய் எங்கு முடித்தாரோ அந்த இடத்தில் சலார் தாெடங்குகிறார் என்பது போன்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

பட ரிலீஸ் எப்போது? 

சலார் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு 2021ஆம் ஆண்டே வெளிவந்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு பணிகளும் ப்ரொடக்ஷன் பணிகளும் நடைப்பெற்று வந்தன. இந்த கடந்த ஆண்டே இப்படம் வெளியாக இருந்தது. சில காரணங்களுக்காக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. சலார் படம், இந்த ஆண்டு செப்டமர் மாதம் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. 

மேலும் படிக்க | ‘கே.ஜி.எஃப்’ யூனிவர்ஸை உருவாக்கும் கன்னட இயக்குநர்..? ‘சலார்’ படத்தின் பின்னணி என்ன..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News