தமிழ் திரையுலகில் தனது முதல் மூன்று படங்கள் மூலமாகவே முத்திரை பதித்த ஹீரோவாக மாறிவிட்டார், லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமான இவர், அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து மாபெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து விட்டார். அடுத்ததாக இவர் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து, இந்த படம் குறித்த எக்ஸ்களூசிவ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தந்தை மகனாக விஜய்-சஞ்சய் தத்?
லியோ படத்தில் தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பாலிவுட்டிலிருந்தும் நடிகர் ஒருவரை இறக்குமதி செய்துள்ளார், லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே விஜய், த்ரிஷா, மன்சூர் அலி கான், கெளதம் வாசுதேவ் மேனன் என பல நட்சத்திரங்கள் இருக்க நடிகர் சஞ்சய் தத்தும் இந்த படத்தில் இணைந்தார். இவர், காஷ்மீரில் நடைப்பெற்ற லியோ படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்துகொண்டார். இதையடுத்து, இவரது கதாப்பாத்திரம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லியோ படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய்தத் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமன்றி, தந்தை சஞ்சையும் மகன் விஜய்யும் கேங்ஸ்டர் கதாப்பாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
கதை இதுதானா?
லியோ படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் குறித்த சில தகவல்களும் வெளியானது. இப்படத்தில் கேங்ஸ்டராக இருந்த விஜய்யின் கதாப்பாத்திரம் அதன் பிறகு எதுவும் வேண்டாம் என ஊட்டியில் சாக்லேட் ஃபேக்டரி நடத்துவது போலவும் அவரைத்தேடி பிரச்சனைகள் வருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லா லோகேஷ் கனகராஜ்ஜின் படங்கள் போலவும் இந்த படத்திலும் ரத்தம்-கொலை-சண்டை என ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என நம்பப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து திரையுலகங்களிலும் எதிர்பார்ப்பு
லியோ படத்திற்கு கோலிவுட்டில் மட்டுமல்ல, இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் இதுவரை யாருமே ஹாலிவுட்டில் மட்டுமே இருந்து வந்த ‘யூனிவர்ஸ்’ வகை கதை, முதன் முறையாக தமிழில் வந்திருக்கிறது. அப்படி லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸில் வெளியானதுதான் கைதி மற்றும் விக்ரம். அடுத்து எடுக்கப்பட உள்ள இந்த படத்தின் இரண்டு பாகங்களும் அதே யூனிவர்ஸில்தான் வெளியாகவுள்ளன. மேலும் முன்னணி நடிகர்களாக கருதப்படும் கமல், ஃபகத் ஃபாசில் போன்ற நடிகர்களும் இந்த யூனிவர்ஸ் படங்களில் உள்ளனர். லியோ படமும் LCU-விற்குள் வரும் என்ற அறிவிப்பு வெளியாகிவிட்டால் தமிழின் பெரிய நட்சத்திரமான விஜய்யும் பாலிவுட்டின் பெரிய நடிகரான சஞ்சய் தத்தும் அந்த லிஸ்டில் சேர்ந்து விடுவர். இதனால்தான் இந்த படத்திற்கு இத்தனை எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அதுமட்டுமன்றி தெலுங்கு மற்றும் இந்தியில் விஜய்க்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளதும் இதற்கு ஒரு காரணம்.
ரஜினியுடன் கைக்கோர்க்கும் லோகேஷ்?
லோகேஷ் கனகராஜ்ஜின் தனித்துவமே, அவர் தனது கதை மற்றும் அதன் அம்சங்கள் குறித்து எங்கேயும் பேசாமல் இருப்பதுதான். தனது அடுத்த மூவ் என்ன என்பதை பிறர் தெரியாதவாறு பார்த்துக்காெள்வார். அந்த வகையில்தான் லியோ படம் LCU வின் படங்களில் ஒன்றா இல்லையா என இன்னும் தெரியப்படுத்தாமல் இருக்கிறார். இந்த நிலையில், லோகி நடிகர் ரஜினியின் 171ஆவது படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த வதந்தி பல நாட்களாகவே உள்ளது. ஆனால் லோகேஷ் கனகராஜ், இது பற்றி வாய்திறக்காமல் இருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ