சீதா ராமன் அப்டேட்: மகா செய்த சூழ்ச்சி.. ராம், சீதா எடுத்த முடிவு

Seetha Raman Today's Episode Update: மகா செய்த சூழ்ச்சி.. ராம், சீதா எடுத்த முடிவு - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2023, 03:05 PM IST
  • நடந்ததை மாற்றி சொல்லும் மகா.
  • கோவப்படும் துரை.
  • சீதாவின் மனதை மாற்றும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: மகா செய்த சூழ்ச்சி.. ராம், சீதா எடுத்த முடிவு title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகாவும் அர்ச்சனாவும் சீதாவிடம் சவால் விட்டு கிளம்ப ராம் எதிரே நிற்க இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ராம் நீங்க எனக்கு சித்தியா இருந்தாலும் இதுவரைக்கும் நான் உங்களை என்னுடைய தெய்வமாக தான் நினைத்து இருக்கேன், இந்த நொடி வரை அப்படி தான் நினைக்கிறன். என்னால் அதை மாத்திக்க முடியாது. மாத்திக்க வச்சிடாதீங்க என்று பதிலடி கொடுக்கிறான். மேலும் நீங்க என்னை சித்தி ஸ்தானத்துல இருந்து கூட பார்க்கலைனு புரிந்துகிட்டேன் என்று அதிர்ச்சி கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறான். 

கோவப்படும் துரை

பிறகு கீழே வந்து ராம் நடந்த விஷயத்தை சொல்ல துரை இவங்களை சும்மா விட கூடாது என்று கோபப்பட சீதா வேண்டாம் அங்கிள், நாங்க பிசினஸ் பண்ணல, அவங்க சவகாசமே எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல துரை அப்படியெல்லாம் விட கூடாது என்று எவ்வளவோ எடுத்து சொல்ல ராமும் சீதா சொல்றது தான் சரி என்று சொல்லி விடுகிறான். 

நடந்ததை மாற்றி சொல்லும் மகா

அதன் தொடர்ச்சியாக வீட்டிற்கு வந்த மகாவும் அர்ச்சனாவும் சேதுவிடம் நாங்க லோனுக்காக கையெழுத்து போட போயிருந்தோம், ஆனால் அந்த சீதா எங்களுக்கு லோன் கிடைக்கலானாலும் பரவாயில்ல நீங்க கையெழுத்து போட கூடாதுனு பெரிய பிரச்சனை பண்ணிட்டா என்று நடந்ததை அப்படியே மாற்றி சொல்கின்றனர். 

மேலும் படிக்க | திருமணம் ஆவதற்கு முன்பு காதல் தோல்வியை சந்தித்த நடிகைகள்!

சீதாவின் மனதை மாற்றும் ராம்

இங்கே சீதாவின் அப்பாவும் அம்மாவும் வீட்டிற்கு வர சீதா அவர்களை வரவேற்க அம்மா உமா இது என்னடி வீடு. இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது என்று ஊருக்கு கூப்பிட சீதா மறுப்பு தெறிக்க ராம் போய்டலாம். நான் என் குடும்பத்துல யாருடைய முகத்துலையும் முழிக்க விரும்பல என சீதாவின் மனதையும் மாற்றி விடுகிறான். 

Seetha Raman

பிறகு வீட்டை காலி செய்து கொண்டு ஊருக்கு கிளம்ப பாட்டி சீதாவையும் ராமையும் வாழ்த்தி அனுப்புகிறார், உனக்கு நான் தான் தலை பிரசவம் பார்ப்பேன். நீ இங்க வந்துடனும் என்று சொல்ல சீதா வெக்கத்துடன் அங்கிருந்து ஊருக்கு கிளம்புகிறாள். 

Seetha Raman

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | கோடிகளில் புரளும் பிக்பாஸ் 7 புகழ் யுகேந்திரன் வாசுதேவன்: சொத்து மதிப்பு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News