மகா கழுத்தில் கத்தி.. மரண பயத்தை காட்டிய சீதா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Seetha Raman Today's Episode Update: சீதா ராமன் சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சீதா மதுவிடம் சென்று கண்ணீர் விட்டு அழுது கிளம்பிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2023, 10:49 AM IST
  • சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?
  • சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மகா கழுத்தில் கத்தி.. மரண பயத்தை காட்டிய சீதா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சீதா மதுவிடம் சென்று கண்ணீர் விட்டு அழுது கிளம்பிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

மதுமிதாவிடம் பாய் சொல்லி கிளம்பிய சீதா நேராக மகாவின் ரூமுக்கு வந்து தூங்கி கொண்டிருக்கும் அவளது கழுத்தில் கத்தியை வைத்து உட்காருகிறாள். திடீரென கண் விழித்து லைட் போடும் மகா கழுத்தில் கத்தியை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பயத்தில் சத்தம் போட உங்களை கொல்ல மாட்டேன், அப்படி கொன்னுட்டா நீங்க சாமி ஆகிடுவீங்க, அப்புறம் ராம் உங்க தீவிர பக்தனாகி விடுவார் என்று சொல்ல மகா திரும்பவும் திமிராக பேச கத்தியை வைத்து அழுத்தி நான் கிளம்பறேன் என்று சொல்லி கிளம்பி வெளியே வருகிறாள். 

அடுத்ததாக ராம் ரூமுக்கு வரும் சீதா ரியல் சீதா ராமன் கதையை தனது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேச ராம் எமோஷனலாக பார்க்கிறான், ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறான். மறுநாள் காலையில் சூரிய உதயம் வந்ததும் எழுந்து கொள்ளும் சீதா ராம் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை தொந்தரவு செய்யாமல் கண்ணீருடன் அவனிடம் பேசி விட்டு காலை தொட்டு கும்பிட்டு விட்டு கிளம்பி செல்கிறாள். 

மேலும் படிக்க | பிரபலமான படங்களில் நடிக்க இருந்து வாய்ப்பை தவற விட்ட நடிகைகள்..

வெளியே செல்லும் சீதாவிடம் செக்யூரிட்டி எங்க போறீங்க மா என்று கேட்க நான் போறேன், என் அக்காவையும் பாஸையும் நல்லபடியா பார்த்துக்கோங்க, அவரை பொறுமையா வண்டி ஓட்ட சொல்லுங்க என்று சொல்லி விட்டு கண்ணீருடன் கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | விஜய் சொல்லியும் கேட்காத மகன் சஞ்சய்! காரணம் இதுவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News