இசையமைப்பாளராக திரையுலகிற்கு வந்து தற்போது நடிகையாக மாறியுள்ளார் ஜிவி பிரகாஷ். இசையமைக்கும் படங்களை விட நடிகனாக பல படங்களில் நடித்து வருகிறார் ஜிவி. அதே சமயத்தில் வாடிவாசல் போன்ற முக்கியமான படங்களில் இசையமைத்தும் வருகிறார். கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஏப்ரல் 1ஆம் தேதி செல்ஃபி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம்
வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார். இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் புரோக்கர்களை பற்றிய கதையாக செல்ஃபி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவனாக படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பணத்திற்காக இந்த புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கு முட்டல் மோதல் உண்டாகிறது, இறுதியில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பருக்கு என்ன ஆனது என்பதே செல்பி திரைப்படத்தின் ஒன் லைன்.
முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷ் படத்தை தன் முதுகில் சுமந்து செல்கிறார். அவரின் அலட்டிக்கொள்ளாத அசால்ட்டான நடிப்பு நம்மளை கதையுடன் ஒன்றிணைகிறது. காலேஜில் மாணவரை சேர்க்க ஜிவி பிரகாஷ் செய்யும் வேலைகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி-க்கு ஜோடியாக வரும் வர்ஷா பொல்லம்மாவிற்கு பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், உறுத்தலாக இல்லாமல் உள்ளார். படம் தொடங்கியதில் இருந்து நேரடியாக கதைக்குள் சென்றுவிடுகிறது, ஹீரோ பில்டப்பிற்காக கதையை விட்டு வெளியே செல்லாமல் கொண்டு சென்றதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
முதல் பாதி ஜிவி என்றால் இரண்டாம் பாதியை கௌதம் வாசுதேவ் மேனன் கைப்பற்றுகிறார். அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் லுங்கி மற்றும் கத்தியுடன் அவர் சண்டையிடும் காட்சிகள் படு மாஸாக உள்ளது. முழுவதும் நெகட்டிவ் சேட் இல்லை என்றாலும், தன் பாணியில் சிறப்பாக கையாண்டு உள்ளார். கதை முழுவதிலும் ஸ்டண்ட் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. ஊர்க்காரன் பாடல் மனதில் நிற்கும் அளவிற்கு மற்ற பாடல்கள் எதுவும் நிற்கவில்லை, பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. ஜிவி-ன் நண்பனாக நடித்து இருந்து அறிமுக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் குணா நன்றாக நடித்து உள்ளார்.
ஒரு மெடிக்கல் சீட்டிற்கு தற்போது எந்த அளவுக்கு மதிப்பு உள்ளது என்பதை இப்படம் உணர்த்துகிறது. பெரிய காலேஜில் தன் பையன் படிக்கவேண்டும் என்ற பெற்றோர்களின் ஆசையை புரிந்து கொண்டு அவர்களிடம் புரோக்கர் கும்பல் செய்யும் வேலைகளை படமாக எடுக்க முயற்சித்த இயக்குனர் மதிமாறனுக்கு வாழ்த்துக்கள். நீட் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், இந்த நீட் தேர்வு தனியார் கல்லோரிகளின் வசூல் வேட்டையில் இருந்து பெற்றோரை காப்பாற்றி உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த செல்பி நிச்சயம் மனதில் பதியும்.
மேலும் படிக்க | கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷைப் புகழ்ந்து தள்ளிய தங்கர் பச்சான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR