ஸ்னோ டிராப் படத்தில் நடித்த கொரிய நடிகை காலமானார்: பல கொரிய படங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்த நடிகை Park Soo Ryun கடந்த 11 ஆம் காலமானார். அறிக்கைகளின்படி, இவர் தனது வீட்டிற்கு செல்லும் போது மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று கூறப்படுகின்றது. இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் இவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம். மேலும் இந்த விபத்தின் காரணமாக இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது, இதனால் தான் கப்பாற்ற முடியவில்லை என்றும் இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது நடிகை Park Soo Ryun உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதில் காலமானார்
29 வயதான பார்க் சூ ரியுன் (Park Soo Ryun) ஜெஜு தீவில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை Park Soo Ryun மரணமடைந்த தகவல் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் திரையுலகில் சோக அலை வீசுகிறது. அனைவரும் சமூக வலைதளங்களில் நடிகைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பார்க் சூ ரியுனின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இசையமைப்பாளராக அறிமுகமாகும் ரஹ்மானின் மகள் - யார் படத்துக்கு தெரியுமா?
குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்
Soompi அறிக்கையின்படி நடிகையின் தாயார் கூறுகையில், ' தனது மகளின் மூளை பதிலளிக்கவில்லை, ஆனால் அவரது இதயம் செயல்படுவதாக தெரிவித்தார். அவள் இன்னும் அருகில் இருப்பதாகவும், நீண்ட ஆயுளுடன் வாழத் தகுதியான ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்ததாக அவரது தாயார் கூறினார்.
பார்க் சூ ரியுன் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்
தென் கொரியாவில் 1994 ஆம் ஆண்டு பிறந்த பார்க் சூ ரியுன் (Park Soo Ryun), 2018 ஆம் ஆண்டு Il Tenore என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ஃபைண்டிங் மிஸ்டர் டெஸ்டினி, தி டேஸ் வி லவ்ட் மற்றும் சித்தார்த்தா உள்ளிட்ட பல படங்களில் தோன்றியுள்ளார். அதேபோல் பார்க் சூர்யூன் பிளாக்பிங்கின் ஜிசூ மற்றும் ஜங் ஹே இன் ஸ்னோ டிராப் ஆகியவற்றிலும் துணை வேடத்தில் தோன்றினார். அவருக்கு திருப்புமுனையாக ஜேடிபிசி வரலாற்று நாடகமான ஸ்னோ ட்ராப் படம் அமைந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இதயனிடையே தகவலின்படி, நடிகையின் உடல் சுவோன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்குகள் இன்று அதாவது ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | காட்சி 2 நிமிஷம் தான் ஆனால் 14 மணி நேரம் தண்ணிக்குள்ள நின்ன ரகுல் ப்ரீத் சிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ