இந்தத் தொற்றுநோய் காலத்தில் தனது செலவுகளை சமாளிக்க வேலை செய்வதாக சொல்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். அப்பா கமலஹாசனும், அம்மா சாரிகாவும் தனக்கு உதவவில்லை என்று சொல்லும் ஸ்ருதி, தன்னுடைய செலவுகளுக்காக வேலை பார்க்க வேண்டியது கட்டாயமாக இருப்பதாக சொல்கிறார்.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசனின் மகளின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, நடிகர் பிரபாஸின் சலார் (Salaar) திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கியிருக்கிறது.
ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எஸ்பி ஜனநாதன் இயக்கும் அரசியல் த்ரில்லர் திரைப்படம் லாபம்.
Also Read | தனது முதல் டிவிட்டர் பதிவில் தமிழக முதலமைச்சரை வாழ்த்திய இயக்குநர் பாலா!
ஜீ மீடியாவுக்கு இந்த நேர்காணலை கொடுத்த போது, ஸ்ருதி ஹாசன் தனது கருத்துக்களை வெளிப்படையாக நறுக்குத் தெறித்தாற் போல கூறினார். தற்போது, நாட்டின் நிலைமை சிறப்பாக இல்லை. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் போராடுகிறோம். மெதுவாகவும் படிப்படியாகவும் லாக்டவுன் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது என்று கூறுகிறார் ஸ்ருதி.
லாக்டவுன் இருந்தாலும், சில நகரங்களில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் வீட்டில் தங்க அறிவுறுத்தினாலும், வயிற்றை நிரப்பவும், தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்ளவும், பிற காரணங்களுக்காகவும் மக்கள் வேலைக்கு செல்கிறார்கள். எனவே நான் வேலை செய்வது பெரிய விஷயம் இல்லை என்று ஸ்ருதி ஹாசன் சொல்கிறார்.
தற்போது முகக்கவசம் இல்லாமல் செட்டில் இருப்பதற்கும் பயமாக இருக்கிறது, நான் பொய் சொல்ல விரும்பவில்லை. பணத் தேவை இருக்கும் வேறு எவரையும் போலவே எனக்கும் செலவுக்கு பணம் தேவை. அதனால் நான் மீண்டும் வேலைக்கு வந்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல் நான் முடிக்க வேண்டிய பிற தொழில்முறை கடமைகளையும் முக்கியமானதாக நினைக்கிறேன் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறினார்.
Also Read | தவறு செய்தால் பதவி நீக்கம்: தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தனது சொந்த பில்களை செலுத்த வேண்டும் என்பதற்காக வேலை செய்வது அவசியம் என்கிறார் ஸ்ருதி. பிரபல நடிகர் கமல ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகளாக இருந்தாலும், ஸ்ருதி சுதந்திரமானவர்,
தனது சொந்த விருப்பப்படி வாழ விரும்புபவர்.நான் குழந்தை இல்லை என்று சொல்லும் ஸ்ருதி, "எனக்கு வரம்புகள் உள்ளன. என் அப்பா அல்லது மம்மி எனக்கு உதவி செய்யவில்லை" என்று சொல்கிறார். ஸ்ருதி ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தனது பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறினார், தான் வாழ்க்கையில் எடுத்த ஒவ்வொரு முடிவிற்கும் பெருமைப்படுவதாக சொல்கிறார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.
"நல்லதோ, கெட்டதோ, நானே. நானே நான் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளேன். தொற்றுநோய்க்கு ஒரு வீட்டை வாங்கினேன் எனவே, எனக்கு அடிப்படை நிதிக் கட்டுப்பாடுகள் உள்ளன" என்கிறார் ஸ்ருதி ஹாசன்.
Also Read | ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல்
நான் என் ஈ.எம்.ஐகளை ஒழுங்காக செலுத்த முயற்சிக்கிறேன். உணவு இல்லாதவர்கள் மற்றும் மருந்துக்கு பணம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். இது எல்லாவற்றையும் நினைத்து நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன் என்கிறார் ஸ்ருதி.
லாக்டவுன் மற்றும் பல காரணங்களால் வெளியில் செல்வதும், பணியிலும் முடக்க நிலை ஏற்பட்டதால், ஸ்ருதிஹாசன் வீட்டிலேயே தங்கி தனது இசை ஆர்வத்தை பூர்த்தி செய்வது மற்றும் போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.
இந்தத் தொற்றுநோயை வெல்ல வேண்டுமானால், நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சொல்கிறார் ஸ்ருதி. "நம்மிடம் வேறு ஒரு தெரிவு கிடையாது. நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
தற்போது கேஜிஎஃப் வெற்றிப்பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR