வித்யாசமான முயற்சி!! அனிருத்தின் ‘தும்பா’ ப்ரமோஷனல் வீடியோ!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான `கனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தர்ஷன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

Last Updated : Feb 22, 2019, 12:16 PM IST
வித்யாசமான முயற்சி!! அனிருத்தின் ‘தும்பா’ ப்ரமோஷனல் வீடியோ!!  title=

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான `கனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தர்ஷன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளனர். இவர்களை தவற கலக்கப்போவது யாரு தீனா நடிக்கிறார். இந்தப் படத்தில் இசையமைப்பாளர்களான அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில் இதுவரை அறிவிக்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ப்ரோமோ வீடியோவை தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார். இந்த வீடியோவில் இயக்குனர் ஹரீஷ் ராம் இசையமைப்பாளர் அனிருத்திடம் இன்னும் பாடல் தரவில்லை என்று சொல்ல, அதற்கு பாடலுக்கான சூழல் என்ன என்று அனிருத் கேட்கிறார். புலி வருவது போன்ற காட்சி என்று இயக்குநர் சொல்ல, நீங்கள் முதலில் அந்த காட்சியை படமாக்குங்கள் புலியை பார்த்தால் தான் இசையமைக்க முடியும் என்கிறார் அனிருத். அதற்கு உடனே இயக்குனர், அனிருத் இருக்கும் இடத்திற்கு புலியை அனுப்புகிறார். புலியை பார்த்து பயந்து அனிருத் இசையமைப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் அதிக வியூஸ்களை கடந்து இணையத்தைக் கலக்கி வருகிறது. 

Trending News