வனிதா to ஷ்ருத்திகா..தொழில் அதிபர்களாக வலம் வரும் சின்னத்திரை பிரபலங்கள்!

சுய தொழில் நடத்தி வரும் சின்னத்திரை பிரபலங்களின் லிஸ்ட். அட.. இத்தனை பேரா!  

Written by - Yuvashree | Last Updated : Sep 2, 2023, 05:40 PM IST
  • சின்னத்திரை நடிகர்கள் பலர் நடிப்பை தாண்டி சுய தொழிலும் செய்கின்றனர்.
  • லிஸ்டில் வனிதா, சஞ்சீவ் வெங்கட், ஸ்ருத்திகா போன்ற பலர் உள்ளனர்.
  • வேறு எந்தெந்த நடிகர்கள் எல்லாம் இந்த லிஸ்டில் இருக்கின்றனர்?
வனிதா to ஷ்ருத்திகா..தொழில் அதிபர்களாக வலம் வரும் சின்னத்திரை பிரபலங்கள்! title=

சின்னத்திரை பிரபலங்கள் பலர் நடிப்பு ஒருபக்கம் சுய தொழில் ஒருபக்கம் என தனக்கான பிசினஸ்ஸை வளர்த்துக்கொண்டு வளர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் யார்? இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க. 

சஞ்சீவ் வெங்கட்:

பிரபலமான சீரயல்களுள் ஒன்றான, திருமதி செல்வம் தொடரில் நாயகனாக நடித்திருந்தவர் சஞ்சீவ் வெங்கட். இவர், விஜய்யின் சில படங்களில் அவருக்கு நண்பராக நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் விஜய்யுடன் நல்ல நட்பு பாராட்டுபவர். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் கலந்து கொண்டார். இவர் ஒரு காபி ஷாப்பை வைத்து நடத்தி வருகிறார். 

ஸ்ரீகுமார் கணேஷ்:

யாரடி நீ மோகினி தொடரின் நாயகன், ஸ்ரீகுமார் கணேஷ். சின்னத்திரை தொடர்களின் பிரபலமான நாயகரகளுள் ஒருவர் இவர். ஆனந்தம், மலர்கள், பந்தம் இதயம், சிவசக்தி போன்ற தொடர்களும் இவரை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தின. தன்னுடன் நடித்த ஷமிதாவை இவர் 2009ஆம் ஆண்டு கரம் பிடித்தார். நடிப்பை தவிர இவர் சிறிய தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்து நடத்தி வருகிறார். 

மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்தில் நயன்தாராவிற்கு பதில் ‘இந்த’ நடிகை இடம்பெற இருந்தாரா..?

மகாலக்‌ஷ்மி:

சமீபத்தில் வைரலாக இருக்கும் சீரியல் நடிகைகளுள் ஒருவர் மகாலக்‌ஷ்மி. இவர், தேவதையை கண்டேன், செல்லமே, ஒரு கை ஓசை, அவள், தாமரை உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவருக்கு வில்லி கதாப்பாத்திரங்களே வழங்கப்படும். இவர், கடந்த ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவரின் தொழிலில் இவரும் உறுதுணையாக இருக்கிரார். 

மகேஷ்வரி:

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் கவனத்தை ஈர்த்த போட்டியாளர் மகேஷ்வரி. இவர், புது கவிதை என்ற தொடரில் காவ்யா என்ற கதாப்பாத்திரமாக நடித்து பிரபலமானார். இதை தவிர்த்து பல படங்களில் துணை கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார். இவர், ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை (boutique) நடத்தி வருகிறார். 

வனிதா விஜயகுமார்:

தமிழ் திரையுலக பிரபலங்களுள் ஒருவர், வனிதா விஜயகுமார். இவர், நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் வனிதா சில பிரபலமான ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்திருந்தார். 

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தவுடன் தமிழ் ரசிகர்கள் பலரின் இல்லங்கள் முதல் உள்ளங்கள் வரை ரீச் ஆனார். இவர் குறித்த விஷயங்கள் பல தற்போது வரை சர்ச்சையானதாக பார்க்கப்படுகிறது.  இவர், தற்போது புதிதாக சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். வனிதா சொந்தமாக ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அச்சிடப்ப்பட்ட சேலைகளை வடிவமைக்கும் வேலைகளை இவரது நிறுவனம் செய்து வருகிறது. வனிதாவிற்கு ஆடை வடிவமைப்பு மீது ஆர்வம் உள்ளதால் அவர் இந்த நிறுவனத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. வனிதா பல முகூர்த்த புடவைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார். மேலும், வாடிக்கையாளர்கள் கேட்பது போல அவர்களுக்கு டிசைனர் ப்ளவுஸ் மற்றும் சுடிதார்களை வடிவமைத்து கொடுத்து வருகிறார். 

பப்ளூ:

வயதானாலும் அழகு குறையாத நடிகர்களுள் ஒருவர், பப்ளு பிரித்விராஜ். இவர், அவள் வருவாளா படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து வாணி ராணி, கண்ணான கண்ணே போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

பப்ளூ, பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். சென்னையை தாண்டி இவரது கடை பிரபலமாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு வகை உணவுகளும் இவரது கடையில் கிடைக்கும் என்று க்கூறப்படுகிறது. 

ஸ்ருத்திகா அர்ஜுன்:

பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசனின் பேத்தி ஆவார். நள தமயந்தி, ஸ்ரீ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல யூடியூம் தளம் ஒன்றிற்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதிலிருந்து பிரபலமான இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில்  பங்கேற்க வைத்தனர். இவரே இதில் வெற்றியும் பெற்றார். இவருக்கு அழகு சாதன பொருட்கள் மீதும் அதிக ஈர்ப்பு உள்ளது. பிரபலமான இரண்டு அழகு சாதன பிராண்டுகளை இவர் நடத்தி வருவதாக கூறபடுகிறது. 

மேலும் படிக்க | ஹாலிவுட் நடிகரின் ரசிகராக மாறிய விஜய்..! யார் இந்த டான்சல் வாஷிங்டன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News