உடல் ஆரோக்கியம் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க, அரிசி கோதுமைக்கு பதிலாக க்ளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் இல்லை என்றாலும் வாரத்தில் மூன்று முறையாவது சிறு தானிய உணவுகளை சேர்ப்பது வியக்கத்தக்க வகையில் பலன் தரும்.
அரிசி மற்றும் கோதுமையில், கார்போஹைட்ரேட் என்னும் மாவு சத்துடன், கலோரிகளும் அதிகமாக இருக்கும். எனவே ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், சிறுதானிய உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ராகி என்னும் கேழ்வரகு, சாமை, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள், எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டால், அதனை சூப்பர் ஃபுட் (Health Tips) என்று தாராளமாக அழைக்கலாம். மத்திய அரசும் சிறுதானிய உணவுகளை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகிறது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐநா சபை, கடந்த 2023 ஆம் ஆண்டு, சிறுதானியங்களின் ஆண்டாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
சிறுதானியங்கள் எண்ணற்ற வகையில் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியவை
1. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கொழுப்பை எடுத்து உடல் எடையை குறைக்கும். மேலும் வளர்ச்சியை மாற்றத்தை தூண்டும் ஆற்றல் சிறுதானியங்களுக்கு உண்டு.
2. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
3. கால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு வலு சேர்த்து, மூட்டு வலி முழங்கால் வலி, ஆகியவற்றை போக்குவதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் தாக்காமல் பாதுகாக்கும்.
மேலும் படிக்க | மூளை ஆரோக்கியம் முதல் மூட்டு வலி வரை... ஆச்சர்யங்களை கொடுக்கும் வாழைக்காய்
4. சிறுதானியங்களில் உள்ள வைட்டமின்கள் இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. அதிலும் இதில் உள்ள நியாசின் என்னும் வைட்டமின் பி3, ட்ரை கிளசரைடு ரைடுகளின் அளவை குறைக்க உதவுகிறது. இவை கொலஸ்ட்ராலை போலவே இதயத்திற்கு பெரும் ஆபத்தை கொண்டு வரக்கூடியவை.
5. நீரழிவு நோயை கட்டுப்படுத்த, சிறுதானிய உணவுகளை கட்டாயம் டயட்டில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம். கலோரிகள் குறைவு. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும் இதனால் அடிக்கடி பசி எடுக்காது. கிளைசிமி குறியீடு மிகவும் குறைவு என்பதால், நீரழிவு நோய்க்கான சிறந்த உணவாக சிறுதானியங்கள் இருக்கும்.
5. இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்து இருப்பதால், ரத்த சோகையை போக்கி, உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்குகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்
மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ