தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படம் தற்போது உலகளவில் 450 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22), இப்படம் இந்தியாவில் சுமார் 50 கோடி ரூபாய் வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. விமர்சனங்கள் கலவையாக இருந்தபோதிலும், 'லியோ' பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் லியோ படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இது 2023ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். லியோ' உலகம் முழுவதும் ரூ.400 கோடியை ($48 மில்லியன்) தாண்டியுள்ளது.
மேலும் படிக்க | சந்திரமுகி 2 படத்தில் அதிக சம்பளம் பெற்ற பிரபலம் யார்..? இதோ முழு விவரம்..!
#LEO is the first Tamil to be reported in the Global Comscore website
₹400 Cr Worldwide (ust 4 Days#Thalapathy @actorvijay @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @RIAZtheboss @V4umedia_ pic.twitter.com/ks1HuWQSUt— Mediatalks (@Janakiraman51) October 23, 2023
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22), 'லியோ' இந்திய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்றுள்ளது. இப்படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இப்படம் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளதாகவும், கேரளாவில் ரூ.8 கோடியும், கர்நாடகாவில் ரூ.5 கோடியும், ஆந்திரா-தெலங்கானாவில் ரூ.4 கோடியும் வசூலித்தது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் 'லியோ' அமோக வெற்றி பெற்று வருகிறது. 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படமான லியோவும் வெற்றி ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லியோ படம் கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகிய படங்களின் தொடர்ச்சிகளை கொண்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும். லியோ படம் விஜய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான விஜய் படங்களை போன்று அறிமுக பாடல், சண்டைக்காட்சி இல்லாத முற்றிலும் வித்தியாசமான படமாக லியோ இருந்தது. லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படத்தின் முதல் நாள் வசூலையே இந்தப் படம் பின்தள்ளியுள்ளது. தற்போது படம் 1000 கோடி ரூபாய் வசூலைப் பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
லியோ படத்தில் நடிப்பதற்காக விஜய் ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் ‘தளபது 68’ விஜய் 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. லியோ படத்தில் விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கியுள்ளவர், சஞ்சய் தத்தான் என கூறப்படுகிறது. பான் இந்திய நடிகரான இவர் பாலிவுட்டில் பல படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரும் விஜய் போலவே திரையுலகில் மிகவும் அனுபவசாலி. கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த பிறகு, தற்போது இவர் பான் இந்திய அளவில் பெரிய நடிகராக வலம் வருகிறார். இவர், லியோ படத்திலும் ஆண்டனி தாஸ் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக இவர் 8 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அடேங்கப்பா..! விஜய் மனைவி சங்கீதாவிற்கு இவ்ளோ சொத்து இருக்கா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ