கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துவரும் இந்தியன் 2 படம், இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஷங்கர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மற்றும் சிஜி பட வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.
இந்தியன் 2:
கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வேற லெவலில் ஹிட் அடித்த படம், இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன், அப்பா-மகன் என இரண்டு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மணிஷா கொய்ராலா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் கமல், தாத்தா கதாப்பாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனமும் உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து தயாரிக்கின்றனர். பெரும் பொருட் செலவில் படம் உருவாகி வருகிறது.
மேலும் படிக்க | Kamal Haasan: இயக்குநர் ஷங்கருக்கு ஆசையாக பெரிய பரிசு கொடுத்த கமல்..! என்ன காரணம்..?
இந்தியன் 3 திரைப்படம்?
நடிகர் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம், இன்று வெளியாகியுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்தது. இதற்காக உதயநிதி ஸ்டாலினும் வடிவேலுவும் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டிருந்தனர். அப்பாேது உதயநிதியிடம் இந்தியன் 2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இந்தியன் 3 படம் பண்ண வேண்டும் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் இந்த படம் முடியட்டும் அப்பறமாக அதை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளோம்” என உதயநிதி கூறியுள்ளார்.
“கமல்சார் பயங்கர ஹேப்பி..”
நடிகர் கமல்ஹாசன், நேற்று இந்தியன் 2 பட இயக்குநருக்கு ஒரு விலையுயர்ந்த கைகடிகாரத்தை பரிசாக கொடுத்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், “இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். ஷங்கர் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். கமல்ஹாசன், இந்தியன் 2 படத்தின் காட்சிகள் சிலவற்றை பார்த்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அப்போது “கமல் சார் பயங்கர ஹேப்பி..ஷங்கர் சாரும் ஹேப்பி..இப்போதைக்கு பட வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. நிறைய சிஜி வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதனால், இந்தியன் 2 படத்திற்கு பிறகு இந்தியன் 3 படத்திற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என பேசப்படுகிறது.
இந்தியன் 2 ரிலீஸ் எப்பாேது?
இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஆரம்பித்து சில முட்டுக்கட்டைகளால் நின்று போனது. படத்தின் இயக்கநர் ஷங்கர் இந்தியன் 2 படம் மட்டுமன்றி ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் எனும் படத்தையும் இயக்கி வருகிறார். இரண்டு படங்களுமே இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி படங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மாமன்னன் படத்திற்காக உதயநிதிக்கு பாராட்டு..
தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஜாலியான படங்களில் நடிக்க ஆரம்பித்து சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் சீரியஸான ஹீரோவாக மாறினார், உதயநிதி ஸ்டாலின். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தில் இவர் புரட்சிமிகு இளைஞராக நடித்துள்ளார். இது, இவரது சினிமா வாழ்க்கையிலேயே மிகவும் புதிதான பாணியில் உள்ள படம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இனி வரும் காலங்களில் உதயநிதி சினிமாவில் நடிக்க இருந்தால் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுக்குமாறும் ரசிகர்கள் இவருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதுதான் கடைசி படம்…
நடிகராக மட்டுமன்றி தமிழக அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இனி வரும் காலங்களில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் 3-5 வருடங்களுக்கு சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். எனவே, மாமன்னன் படமே இவருக்கு கடைசி படம் என்று ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.
மேலும் படிக்க | டிமான்டி காலனி-2 பாடப்பிடிப்பு நிறைவு..! ரிலீஸ் எப்போது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ