மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் இந்திய மட்டுமின்றி உலக நாடுகளிலும் பாக்ஸ் ஆபிசில் வெற்றிபெற்ற நிலையில், படத்தின் இரண்டாம் பாகமும் சிறந்த வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது, படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி நடிப்பில் ஆக்ஷன் அட்வென்ச்சர் படம் ஒன்று உருவாகிறது, இப்படத்திற்கு 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் 3டியில் 10 மொழிகளில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யா 13க்கும் மேற்பட்ட கெட்அப்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஏற்கனவே ரிலீஸ்க்கு முந்தைய வியாபாரத்தில் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இந்த செய்தி நடிகர் ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லும் படிக்க | விரைவில் OTT-யில் வெளியாக இருக்கும் சூப்பர்ஹிட் தமிழ் படங்கள்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது 'ஜெயிலர்' படம். பழைய படங்களில் நடித்தது போன்று சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த 'இந்தியன்-2' படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 1996-ல் வெளியான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக 'இந்தியன்-2' வெளியாகவுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | 'CWC 4' நிகழ்ச்சியை விட்டு விலகியதும் மணிமேகலை செய்த முக்கிய செயல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ