அஜித், விஜய் இணையும் படம்: வாய்ப்பில்ல ராஜா

அஜித், விஜய் என இரண்டு பேரையும் வைத்து வெங்கட் பிரபு படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2022, 06:12 PM IST
  • வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • தற்போது தெலுங்கு சினிமா பக்கம் போய் உள்ளார் வெங்கட் பிரபு.
  • விஜய் அஜித்யை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற வதந்தி வெளியானது.
அஜித், விஜய் இணையும் படம்: வாய்ப்பில்ல ராஜா title=

’மங்காத்தா 2’-ம் பாகம் படத்தை விரைவில் வெங்கட்பிரபு உருவாக்க இருப்பதாகவும் அதில் அஜித்குமார், விஜய் நடிக்க இருப்பதாகவும், இதை வெங்கட்பிரபு உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் திரைக்கதை சிறப்பாக வந்து உள்ளது, விரைவில் இப்படம் ஆரம்பிக்கபடும் என இதன் தொடர்ச்சியாக பல செய்திகள் வெளியானது.  

vp

மேலும் படிக்க | சூர்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள வெங்கட்பிரபு, ’’காலேஜ் ஃபங்ஷன் ஒன்றில் கலந்துகொண்ட என்னிடம், வழக்கமாக கேட்கும் ’மங்காத்தா 2’ படம் பற்றி கேட்கப்பட்டது. அஜித், விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் ஆசை இருக்கிறது என்று பல பேட்டிகளில் சொல்லி வந்ததை சொன்னேன். ’மங்காத்தா 2’ படத்துக்கான கதையை இன்னும் உருவாக்கவில்லை. இது தொடர்பாக அஜித் மற்றும் விஜய்யை சந்தித்து பேசவில்லை. இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது, ரசிகர்களின் விருப்பம். அவர்கள் கனவை சிதைக்க விரும்பவில்லை’' என்று தெரிவித்துள்ளார்.  

vijayajith

மேலும் சமீபத்தில் ரசிகர் ஒருவர் அஜித் மற்றும் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்ற செய்தியை பகிர்ந்திருந்தார்.  இதற்கு வெங்கட் பிரபு "இது எப்போ" என்று கிண்டலாக பதில் அளித்து இருந்தார்.  சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்தது.  மேலும், நீண்ட நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மன்மதலீலை படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இது வெங்கட் பிரபூவிற்கு பேக் டூ பேக் வெற்றியாக அமைந்தது.  தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளார்.  

 

2014ம் ஆண்டு அஜித்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் ஒரே தேதியில் வெளியானது.  அந்த சமயத்தில் பல இடங்களில் ரசிகர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.  அதன் பிறகு இருவரது படங்களும் ஒரே தேதியில் வெளியாகவில்லை.  அஜித், விஜய் படங்கள் ஒரே தேதியில் வெளியானாலே பெரிய பிரச்சனைகள் உருவாகும் பட்சத்தில் இருவரும் இணைந்து நடிப்பது சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | காத்துவாக்குல வெளியான ’டான்’ படத்தின் சீக்ரெட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News