பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு மாரடைப்பால் மரணமடைந்தார்.
மலையாளத் திரைப்படத்துறையில் கருப்பு - வெள்ளை காலத்திலிருந்து வண்ணத்திற்கு திரையுலகம் மாறியது வரை தனது பெரும் பங்களிப்பை ஆற்றியவர் ராமச்சந்திர பாபு. 72 வயதாகும் இவர் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
4 முறை சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார் ராமச்சந்திர பாபு. எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கத்தில் 1973- ஆம் ஆண்டு வெளியான நிர்மல்யம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக ராமச்சந்திர பாபு பணியாற்றியிருந்தார். இந்தப் படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. ராமச்சந்திர பாபு மலையாளப் படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, அரபு மற்றும் ஆங்கிலப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் மாரடைப்பால் கோழிக்கோட்டிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமச்சந்திர பாபு மறைவுக்கு கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சன்னிதாலா மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.