கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக கடந்த ஒரு வருட காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த படம் குறித்த செய்திகள் வெளிவந்ததில் இருந்து இதில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக அனைவரும் கூறி வருகின்றனர். இந்த படத்திற்கு ‘லீடர் ராமையா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ‘மக்களால் உருவாக்கப்பட்ட அரசன்’ என்ற டேக்லைனுடன் இந்த படம் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. பிரபல கன்னட இயக்குநர் சத்ய ரத்னம் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
படப்பிடிப்பு:
சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம், இந்த் மாதமே தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், விஜய் சேதுபதி இதில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் கன்னட திரையுலக வட்டாரங்களை சேர்ந்தவர்கள் பேசிக்கொள்கின்றனர். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | பிரபல சீரியல் நடிகையில் கணவர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இரண்டு பாகங்கள்…!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு, இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாம். முதல் பாகத்தில் சித்தராமையாவின் குழந்தை பருவமும் அவரது இளமை பருவமும் காண்பிக்கப்பட உள்ளது. அதனால் இந்த முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பெரிதாக வேலை இருக்காது என கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் சித்தராமையாவின் அரசியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் காண்பிக்கப்பட உள்ளன.
துணை நடிகர் டூ ஹீரோ:
கடின உழைப்பிற்கும் அதன் பிறகு கிடைத்த உயர்விற்கும் தமிழ் சினிமாவில் பலர் எடுத்துக்காட்டாக உள்ளனர். அப்படி வளர்ந்த வந்த பிரபலங்களுள் ஒருவர், விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். வழக்கமான ஆக்ஷன் ஹீரோ போல இல்லாமல் யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன் போன்ற இவரது தோற்றம் பல பெண்களை கவர்ந்தது. முன்னணி ஹீரோக்களின் படங்களில் சைட் ரோலில் நடித்து ஓரிரண்டு வசனங்களுடன் விடைப்பெற்று கொண்டிருந்த விஜய் சேதுபதி, இன்று பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பயங்கர வில்லனாக நடித்து வருகிறார்.
வில்லனாக உருவானது எப்படி..?
நடிகர் விஜய் சேதுபதி, முதன் முதலாக பயங்கர வில்லனாக நடித்த படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘பவானி’ எனும் கதாப்பாத்திரத்தில் வந்திருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் இதற்கு முன்னரே இவர் ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியே இவருக்கு ‘விக்ரம்’ படத்தலும் ‘சந்தனம்’ எனும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வாயப்பு கிடைத்தது. தற்போது அதையே பயன்படுத்திக்கொண்டு பாலிவுட் வரை சென்றுவிட்டார்.
விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள்:
நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் படங்களை விட பிற மொழி படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள ‘ஜவான்’ படத்தில் வில்லன், விஜய் சேதுபதிதான். நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியானது. இதில் விஜய் சேதுபதி கையில் துணியை கட்டிக்கொண்டு குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. படம், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. தற்போது விஜய் சேதுபதி, விடுதலை 2 பட பணிகளிலும் பிசியாக உள்ளார். சூரி ஹீரோவாக நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான விடுதலை படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார், விஜய் சேதுபதி. இந்த கதாப்பாத்திரமே இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளது. இதில், விஜய் சேதுபதிக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக தகலவ்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | மணிரத்னம் வீட்ல விசேஷம்..! ஒன்று கூடிய கோலிவுட் இயக்குநர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ