‘ரஜினி-169’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்! - இயக்குநர் நெல்சன் நீக்கமா?!

இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள நடிகர் ரஜினியின் 169ஆவது படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 7, 2022, 06:16 PM IST
  • நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
  • ரஜினிகாந்தின் 169ஆவது படம் பற்றி புதிய தகவல்.
  • ரஜினியின் படத்தில் தற்போது கே.எஸ். ரவிக்குமாரும் இணைந்துள்ளாராம்.
‘ரஜினி-169’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்! - இயக்குநர் நெல்சன் நீக்கமா?! title=

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வியாபார ரீதியாக படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை எனவும் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. 

இதையடுத்து, ட்ரெண்டிங்கில் உள்ள இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க முன்வந்தார் ரஜினி. இந்தப் பேச்சுவார்த்தை நடந்தபோது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பீஸ்ட் படம் வெளியாகவில்லை. பின்னர் வெளியான விஜய்யின் பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

இதனால் ரஜினி அப்செட் ஆனதாகவும் நெல்சனுக்குப் பதிலாக இயக்குநரை மாற்ற ரஜினி முடிவெடுத்துவிட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. ஆனால் படக்குழுவிடமிருந்து அது மாதிரியான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனது 169ஆவது படத்துக்கான கதையை ரஜினியே எழுதியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் தனக்கு முத்து, படையப்பா என மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநரான கே.எஸ். ரவிக்குமாரையும் இப்படத்தில் இணைத்துள்ளாராம் ரஜினி

மேலும் படிக்க | கமல்ஹாசனின் கரியர் பெஸ்ட்டா விக்ரம்? - உண்மை நிலவரம் என்ன?

 

அதன்படி, இப்படத்தில் நெல்சனுடன் கூடுதல் திரைக்கதை ஆசிரியராக கே.எஸ். ரவிக்குமார் பணியாற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் இளம் மற்றும் அனுபவ இயக்குநர்கள் கூட்டாக இணைந்து ரஜினி-169க்கு திரைக்கதை எழுதவுள்ளனராம். படத்தை ஏற்கெனவே சொன்னபடி நெல்சன்தான் இயக்கவுள்ளாராம். வரும் ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ‘விக்ரம்’ல ஹிட் அடிச்ச ‘சக்கு சக்கு’ ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News