தமிழ் திரையுலகின் இசை அரசர்களுள் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி மனதிற்கு இதம் அளிக்கும் அவரது பிரபலமான காதல் தோல்வி பாடல்களை பார்க்கலாம்.
“கண்பேசும் வார்த்தைகள்..”
செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளிவந்திருந்த பாடல்கள் பல ரசிகர்களின் மனங்களிலும் போன்களிலும் ஃபேவரட் ப்ளேலிஸ்டாக இடம் பெற்றுள்ளன. இவர்களின் வெற்றி கூட்டணியில் உருவான படம், 7 ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா ஆகியோர் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்திருப்பர். இதில், தன் காதலை புரிந்து காெள்ளாத பெண்ணிற்காக நாயகன் பாடும் பாடல்தான், “கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை..” பெண்கள் மீது குறை கூறும் வகையில் இப்பாடல் எழுதப்பட்டிருந்தாலும், உடைந்த இதயத்திற்கு இரவுகளில் ஆறுதலாக இருக்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று.
“காதல் வளர்த்தேன்..”
சிம்பு இரு வேடங்களில் நடித்திருந்த படம், மன்மதன். இந்த படத்தில் வைஷ்ணவி என்ற பெண்ணை காதலிக்கும் மொட்ட மதன், அவளிடம் காதலை சொல்லி விட்டு பதிலுக்காக காத்திருக்கும் போது இந்த பாடல் இடம் பெற்றிருக்கும். “இதயத்தின் உள்ளே..பெண்ணே நான்..செடி ஒன்னுதான் வெச்சு வளர்த்தேன்..” என்ற வரி, ஒருதலை காதலர்களின் மனங்களில் என்றுமே ஒலித்துக்கொண்டிருக்கும். இதை, கேகே என்பவர் பாடியிருப்பார்.
மேலும் படிக்க | Jawan: அனிருத்துடன் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!
“லூசு பெண்ணே..”
சிம்பு-யுவன் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதிலும் அன்றைய இளசுகள் மத்தியிலும் இன்றைய இளசுகள் மத்தியிலும் நங்கூரமாய் நச்சென்று இறங்கிய பாடல், “லூசு பெண்ணே..” ராப், மெல்லிசை என இரண்டும் கலந்த காதல் தோல்வி பாடல் இது. தன்னை விட்டு பிரிந்து போன காதலியை தன் பக்கம் இழுக்க பல இளைஞர்கள் உபயோகித்த பாடல் இது. ஆண்களுக்கு மட்டுமன்றி, பல பெண்களுக்கும் கூட இந்த பாடல் சிறந்த “சூப் சாங்” ஆக உள்ளது. இந்த பாடலை சிம்பு, பிரேம்ஜி, பிளேஸ் ஆகியோர் இணைந்து பாடியிருப்பர்.
“என் காதல் சொல்ல…”
படம் முழுவதும் நாயகியை அருகிலேயே வைத்துக்கொண்டு அவள் பிரியும் தருவாயில் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் நாயகனின் பாடல்தான், “என் காதல் சொல்ல நேரம் இல்லை..” பாடல் வரிகளை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். பையா படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலை, தங்கள் க்ரஷ்ஷின் மீது காதல் வைத்திருக்கும் பல ஆண்கள் ஸ்டேடஸாக வைப்பதுண்டு. இதை பலர் தங்களது காலர் டியூனாகவும் வைத்துள்ளனர். ஒரு தலை காதலர்களின் மன வலியை பகிர்ந்து காெள்ளும் பாடலாக பார்க்கப்படுகிறது, இந்த மாஸ்டர் பீஸ்.
“இதுவரை..இல்லாத உணர்விது..”
கோவா படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல், “இதுவை இல்லாத உணர்விது..” இந்த பாடலில், முதலில் பெண் வர்ஷன் இடம் பெற்றிருக்கும். இதை ஆண்ட்ரியா மற்றும் அஜித் ஆகியோர் பாடியிருப்பர். இதையடுத்து, கதையின் நாயகன் ஜெய்யின் இதயம் உடையும் போது ஒரு பாடல் வரும். இதன் வரிகள், ஒரு பெண்ணின் மீது காதல் கொண்ட இளைஞன் அவளால் ஏமாற்றப்பட்டால் என்னென்ன உணர்வுகளை அனுபவிப்பான் என்பதை வரிகளால் விவரித்திருப்பர். முதல் பாடல் சந்தோஷமான இசையுடன் இடம் பெற்றிருக்க, இந்த பாடல் அதற்கு அப்படியே எதிர்மறையானதாக இருக்கும். இதை யுவன் பாடியிருப்பார்.
மேலும் படிக்க | “நான் வந்துட்டேன்னு சொல்லு..” இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ